மழையில் நனைந்து சறுக்கி விளையாடிய ஷகிப் - வைரலாகும் வீடியோ

sports-cricket-shakib-video-goes-viral
By Nandhini Dec 06, 2021 05:34 AM GMT
Report

2-வது நாள் டாக்கா டெஸ்டில் மழை குறுக்கீட்டின்போது வங்காளதேச ஆல்-ரவுண்டர் ஷகிப்- அல்- ஹாசன் மழைநீரில் விளையாடிய காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மைதானத்தில் மழையின்போது பிட்ச் நனையாமல் இருக்க பிளாஸ்டிக் சீட் கொண்டு மூடப்படும். அதில், வங்காளதேச ஆல்-ரவுண்டர் ஷகிப்- அல்- ஹாசன் மழையில் தேங்கிய நீரில் சறுக்கிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வயது எவ்வளவு ஆனால் என்ன மழை என்றால் அனைவரும் குழந்தையே என்ற வார்த்தை இங்கு நிரூபணமாகி உள்ளது. ஷகிப் அல் ஹசன் முதல் டெஸ்டின்போது தொடை காயம் காரணமாக விளையாடவில்லை.

முதல் டெஸ்டைத் தவறவிட்ட பிறகு மீண்டும் 2-வது டெஸ்டில் களமிறங்கினார். அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மைதானத்தில் ஓடுவதும், டைவிங் செய்த சேட்டைகள் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.