ஒழுங்க ஆடவில்லைன்னா கிளம்பிடுங்க... சீனியர் வீரர் அதிரடி நீக்கம் - முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இதோ
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றிருக்கிறது. கிட்டத்தட்ட கடந்த 20 வருடங்களாக இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது கிடையாது.
இதனால், இப்போட்டியை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இத்தொடரின் முதல் போட்டி நாளை தொடங்க இருக்கிறது. தென் ஆப்ரிக்காவின் சென்ச்சூரியன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்கான இந்திய அணியை பொறுத்தவரையில் நிச்சயம் ஒரு சில மாற்றங்கள் இருக்கும். ரோஹித் சர்மா, ஜடேஜா உள்பட சீனியர் வீரர்கள் பலர் காயம் காரணமாக இத்தொடரில் விளையாடவில்லை.
இதனால், இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கிடைக்கும். ரோஹித் சர்மா காயம் காரணமாக விலகியுள்ளதால் மாயன்க் அகர்வாலுக்கு துவக்க வீரராக வாய்ப்பு கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு துவக்க வீரராக கே.எல் ராகுல் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிடில் ஆர்டரில் விராட் கோலி, புஜாரா மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோருக்கு இடம் கிடைக்கும் என தெரிகிறது. தொடர்ந்து சொதப்பி வரும் சீனியர் வீரரான ரஹானேவிற்கு இடம் கிடைக்காது என தெரிகிறது. விக்கெட் கீப்பராக வழக்கம் போல் ரிஷப் பண்ட் களமிறங்குவார். ஆல் ரவுண்டர்கள் வரிசையில் அஸ்வின் களமிறங்குவார்.
பந்துவீச்சாளர்கள் வரிசையில் முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்ப்ரிட் பும்ராஹ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கு இடம் கிடைக்கும் என தெரிகிறது. இது இந்த தொடரின் முதல் போட்டி என்பதால் ஷர்துல் தாகூரை விட இஷாந்த் சர்மாவிற்கே முன்னுரிமை கொடுக்கப்படும். ஒரு வேளை இஷாந்த் சர்மா முதல் போட்டியில் சொதப்பினால் அடுத்தடுத்த போட்டிகளில் ஷர்துல் தாகூருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று தெரிகிறது.
முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இதுதான் -
மாயன்க் அகர்வால், கே.எல் ராகுல், விராட் கோலி, புஜாரா, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், ரவிச்சந்திர அஸ்வின், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்ப்ரிட் பும்ராஹ், முகமது சிராஜ்.