என் பொண்ணு நாட்டுக்கு தங்கம் வாங்கி கொடுத்திருக்கா... நீ என்ன கிழிச்ச? சித்தார்த்தை விளாசிய சாய்னாவின் தந்தை

father angry siddharth sports-cricket saina
By Nandhini Jan 12, 2022 03:32 AM GMT
Report

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து ஆபாசமான பதிவிட்ட நடிகர் சித்தார்த்தை, சாய்னா நேவாலின் தந்தை வெச்சி விளாசியுள்ளார்.

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து ஆபாசமான கருத்து பதிவிட்ட நடிகர் சித்தார்த் பிரச்சினையில் மாட்டி சிக்கித் தவித்து வருகிறார். சமூக பிரச்னைகள் குறித்தும், தனது அரசியல் பார்வை குறித்தும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது எதாவது கருத்தை வெளிப்படையாக பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் நடிகர் சித்தார்த்.

சில நேரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி பிரச்னைகளிலும் மாட்டிக்கொள்வதும் உண்டு. அப்படித்தான், சாய்னா நேவால் குறித்த சித்தார்த்தின் டுவீட்டை ஒருவர் கூட ரசிக்கவில்லை. ஏனெனில் நாட்டுக்காக விளையாடி பதக்கங்களை வென்று கொடுத்த சாய்னா நேவால் குறித்து மிகவும் ஆபாசமாக டுவீட் செய்துள்ளார் நடிகர் சித்தார்த்.

பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் சென்றபோது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். போராட்டத்தையடுத்து, தான் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பிவிட்டார் பிரதமர் மோடி.

பிரதமரின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் விதமான போராட்டக்காரர்களின் செயல்பாட்டிற்கு டுவிட்டரில் சாய்னா நேவால் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் பிரதமருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட நடிகர் சித்தார்த், சாய்னா நேவாலை கொச்சைப்படுத்தும் விதமாக டுவீட் செய்தார். இதனையடுத்து, இது தொடர்பாக சித்தார்த்தின் கருத்துக்கு கண்டனம் எழுந்து வருகிறது.

திரைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் சாய்னா நேவாலுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். தேசிய மகளிர் ஆணையம் சார்பில் மகாராஷ்டிரா காவல்துறை டிஜிபி-யிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக நடிகர் சித்தார்த் சமாளித்தார். ஆனால், அனைவரும் அவருக்கு எதிராக கொந்தளித்து வருகிறார்கள்.

இந்நிலையில், தனது மகள் சாய்னா நேவால் குறித்து சித்தார்த் பேசிய கருத்துக்கு சாய்னா நேவாலின் தந்தை ஹர்வீர் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.

ஒரு ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில், எனது மகள் நாட்டுக்காக பல பதக்கங்களையும் விருதுகளையும் வென்று கொடுத்துள்ளார். நடிகர் சித்தார்த் படங்களில் நடிப்பதை தவிர வேறு என்ன செய்துள்ளார்? நாட்டுக்காக ஏதாவது செய்திருக்கிறாரா? என ஆவேசத்துடன் கேள்வி எழுப்பி இருக்கிறார். தனது மகள் குறித்த சித்தார்த்தின் ஆபாச கருத்தால் கண்ணீரும் சிந்தியுள்ளார் சாய்னாவின் தந்தை.