கடைசிப்போட்டி.. மைதானத்தில் கண்கலங்கிய ராஸ் டெய்லர் - வைரலாகும் வீடியோ

Viral Video sports-cricket Ross Taylor Last Test
By Nandhini Jan 11, 2022 10:24 AM GMT
Report

வங்கதேசம் அணியுடனான டெஸ்ட் தொடரின் 2வது கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியின் மூத்த வீரரும் வலதுகை பேட்ஸ்மேனுமான ராஸ் டெய்லர் மைதானத்திலேயே கண்கலங்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. தற்போது 2 மேட்ச்களைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்டில் வங்கதேசம் வெற்றி பெற்றுள்ளதையடுத்து, ஹேக்லி ஓவல் மைதானத்தில் 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. முன்னதாகவே, வங்கதேச அணியுடனான தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக ராஸ் டெய்லர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்பு, தேசிய கீதம் இசைக்கும் நிகழ்வில் வீரர்கள் அணிவகுக்க, அப்போது ராஸ் டெய்லர் கண்கலங்கினார். உடனேயே சக வீரர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர். இதைக் கண்ட மைதானத்தில் இருந்த அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தார்கள்.

இதோ அந்த வீடியோ -