‘நான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன்’ - ராஸ் டெய்லர் அறிவிப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி

Rest sports-cricket
By Nandhini Dec 30, 2021 03:36 AM GMT
Report

நியூசிலாந்தின் ஜாம்பவான் ராஸ் டெய்லர் சர்வதேச கிரிக்கெட்டிலிருநது ஓய்வு பெறுவதாக தெரிவித்திருக்கிறார்.

நியூசிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர். இவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இந்தக் கோடை விடுமுறைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைபெற்று விடுவேன் என்று ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், சொந்த மண்ணில் நடக்கும் வங்காள தேசத்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 17 ஆண்டுகளாக அளித்த பெரும் ஆதரவுக்கு நன்றி. எனது நாட்டுக்காக விளையாடியதில் எனக்குக் கிடைத்த பெருமை. இனி வரவிருக்கும் போட்டிகளுக்கு தனது முழு கவனம் செலுத்துவதாக டெய்லர் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டு டெய்லர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தனது டெஸ்டில் அறிமுகமானார். டெஸ்ட் போட்டியில் 7,584 டெஸ்ட் ரன்களை குவித்தார். இதில் அவர் 19 சதங்கள் அடித்தார். 233 ஒருநாள் போட்டிகளில் டெய்லர் 8, 581 ரன்கள் எடுத்திருக்கிறார்.

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 21 சதங்கள் அடித்திருக்கிறார். 102 டி-20 போட்டிகளில் 1909 ரன்கள் அடித்திருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் டெய்லர் வெற்றி ரன் அடித்துள்ளார்.