‘சரிங்க... கங்குலி எந்த உலக கோப்பையை ஜெயிச்சி கொடுத்துருக்காரு’ - வெளுத்து வாங்கிய ரவி சாஸ்திரி

Ravi Shastri captaincy affair
By Nandhini Jan 26, 2022 09:10 AM GMT
Report

உலக கோப்பையை வைத்து, நீங்கள் எதையும் தீர்மானிக்கக் கூடாது. ஒரு வீரர் எப்படி ஆடுகிறார், எந்த விதத்தில் அவர் விளையாட்டை அணுகுகிறார், எத்தனை ஆண்டு காலம் கிரிக்கெட்டில் அவர் நிலைத்து நிற்கிறார் என்பதை வைத்து தான், ஒரு வீரரை நீங்கள் மதிப்பிட வேண்டும் என்று ரவி சாஸ்திரி தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், கோலிக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சில கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் பேசியதாவது -

எத்தனையோ பெரிய வீரர்கள் கூட உலக கோப்பையை வென்றதில்லை. கங்குலி கேப்டனாக உலக கோப்பையை வென்றதே இல்லை.

அதே போல, ராகுல் டிராவிட், அணில் கும்ப்ளே, லக்ஷ்மண் உள்ளிட்டோரும் உலக கோப்பையை வென்றது கிடையாது. உலக கோப்பையை வெல்லவில்லை என்றால், அவர்கள் மோசமான வீரர்கள் என அர்த்தமில்லை.

கங்குலியும், கோலியும் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது எனக்கு தெரியாது. நானும் அவர்களிடம் பேசவில்லை.

அவர்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தால், என்னுடைய நிலைப்பாடு என்ன என்பதை நான் தெரிவிப்பேன். ஆனால், அதைப் பற்றி அரைகுறை தெளிவு இருக்கும் போது, நான் கருத்து சொல்வது சரிவராது.

இவ்வாறு அவர் பேசினார். 

இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருந்த சமயத்தில், கோலியுடன் இணைந்து பல சிறப்பான தொடர்களை வென்று, இந்திய கிரிக்கெட் அணி சாதனை புரிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.