“ரெய்னாவை நாங்க வாங்க போறோம்... ’ - சிஎஸ்கே இல்லப்பா... இது வேறு நிர்வாகம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிசிசிஐயின் விதிமுறைக்கு உட்பட்டு ரவீந்திர ஜடேஜா, மகேந்திரசிங் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி ஆகியோரை மட்டும் தக்க வைத்தது.
தொடக்கம் முதலே விளையாடி வந்த ரெய்னாவை தக்க வைக்கப்படவில்லை. மெகா ஏலத்தின்போது ரெய்னாவை வாங்குவோம் என்று சிஎஸ்கே நிர்வாகம் இதுவரை கூறக்கூடவில்லை.
இதனால் அடுத்த சீசனின்போது ரெய்னாவை சிஎஸ்கே வாங்குவது என்பது சந்தேகம்தான். இந்நிலையில், புதிய அணியான லக்னோ, ரெய்னாவை தக்கவைக்க முன்வந்ததாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ரெய்னா உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
இதனால், இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், ரெய்னா கேட்ட தொகையை லக்னோ அணி தர மறுத்துள்ளது. அதனால், அந்த முடிவு கைவிடப்பட்டது. பார்மில் இல்லாத ரெய்னாவுக்கு பெரிய தொகையை செலவு செய்ய அந்த அணி விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. இருப்பினும், மெகா ஏலத்தில் ரெய்னாவை வாங்க அந்த அணி தயாராகத்தான் உள்ளது.
இந்நிலையில், தற்போது பேட்டிகொடுத்துள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நிர்வாகி, 'ரெய்னாவின் அனுபவம், அபார ஆட்டம், பீல்டிங் இது அனைத்தும் அணிக்கு தேவைப்படுகிறது.
இதனால், மெகா ஏலத்தின்போது அவரை வாங்க ஆர்வமாக இருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறது.
அவரை வாங்க பல அணிகள் போட்டி போடும் என்பதால், ஏலத்தின்போதுதான் என்ன நடக்கும் என்பது தெரியவரும்.