மும்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : ரஹானே, இஷாந்த் சர்மா, ஜடேஜா கிடையாது
மும்பை டெஸ்ட் போட்டி முதல் நாள் பெய்த மழை காரணமாக டாஸ் போடுவது தாமதமாகி இருக்கிறது. இந்நிலையில், இந்திய அணியில் காயம் காரணமாக ரஹானே, இஷாந்த் சர்மா, ஜடேஜா இடம் பெற வில்லை என்று அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதே போல் நியூசிலாந்துக்கு பெரும் பின்னடைவாக கேப்டன் கேன் வில்லியம்சன் முழங்கை காயம் காரணமாக ஆட மாட்டார் என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இஷாந்த் சர்மாவின் இடது கை விரலில் காயம் ஏற்பட்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவின் வலது முன் கையில் காயம் ஏற்பட்டு வீங்கி உள்ளதால், அவர் ஆட முடியவில்லை. ரஹானே கோலிக்காக வழிவிட்டிருக்கிறார்.
ஆனால், இவர்களுக்கு மாற்று வீரர்கள் என்பதில் இஷாந்த் சர்மாவுக்குப் பதில் சிராஜ், ரஹானேவுக்குப் பதில் கோலி, ஜடேஜாவுக்குப் பதில் யார் என்பதுதான் தெரியவில்லை. ஒருவேளை பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
ஏனெனில் 3 ஸ்பின்னர்கள் தேவையில்லை என்கிறார் விராட் கோலி. அல்லது கே.எஸ்.பரத்தையோ, சூரியகுமார் யாதவையோ கொண்டு வர வாய்ப்புள்ளது. பரத், சகா இருவரும் அணியில் இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையே கேன் வில்லியம்சன் முழங்கை காயம் காரணமாக ஆட முடியாமல் போயுள்ளார். இந்திய அணியில் ஜடேஜாவுக்குப் பதில் 2016-ல் இங்கு சதம் எடுத்த ஜெயந்த் யாதவ் என்ற ஸ்பின்னர்- ஆல்ரவுண்ட ர் சேர்க்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.