வந்த வேகத்தில் வெளியே திருப்பி அனுப்பிய ரபாடா - வெறுப்பான ரிஷப் பண்ட் - வைரலாகும் வீடியோ

sports-cricket Rishabh Pund Rabada
By Nandhini Jan 05, 2022 10:52 AM GMT
Report

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டு வருகிறது.

தென்னாப்பிரிக்கா சென்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்கா அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இரு அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி தென்னாப்பிரிக்காவின் செஞ்சூரியன் மைதானத்தில் நடந்து வருகிறது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 50 ரன்களும், ரவிச்சந்திர அஸ்வின் 46 ரன்களும் எடுத்தார்கள்.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை துவங்கிய தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.

அறிமுக வீரரான பீட்டர்சன் 62 ரன்களும், சீனியர் வீரர் டெம்பா பவுமா 51 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 79.4 ஓவரில் 229 ரன்கள் எடுத்த தென் ஆப்ரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் பின்பு, 2வது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு கே.எல் ராகுல் (8) மற்றும் மாயன்க் அகர்வால் (23) ஆகியோர் ஏமாற்றம் கொடுத்தனர். இதன்பின் களமிறங்கிய ரஹானே (58) மற்றும் புஜாரா (53) பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

ரஹானே மற்றும் புஜாரா விக்கெட்டை இழந்தபிறகு ரிஷப் பண்ட் டக் அவுட்டாகி வெளியேறினார்கள். முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய அஸ்வின் இந்த இன்னிங்ஸில் 16 ரன்களில் விக்கெட்டை இழந்திருக்கிறார்.

இதன் மூலம் போட்டியின் மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை 6 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 188 ரன்கள் எடுத்திருக்கிறது.