'விக்கெட்' எடுத்ததும்... ‘புஷ்பா’ படத்தின் ஸ்ரீவள்ளி ஸ்டெப்பில் மைதானத்தை கலக்கிய பிராவோ - வைரல் வீடியோ

cricket sports pushpa step dance player
3 மாதங்கள் முன்

Comilla Victorians மற்றும் Fortune Barishal ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடந்தது. அப்போது, Comilla அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த சமயத்தில், 18வது ஓவரை வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிராவோ வீசினார்.

மெஹிதுல் இஸ்லாம் என்பவரின் விக்கெட்டை அதே ஓவரில் பிராவோ வீழ்த்த, மறுநொடியே புஷ்பா படத்தின் அல்லு அர்ஜுன் ஸ்டெப் ஒன்றை சில நொடிகள் ஆடிக் காட்டினார் பிராவோ. மிகச் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தும் ஆல் ரவுண்டர் பிராவோ, ரசிகர்களை பொழுது போக்கவும் தவறுவதில்லை.

விக்கெட் அல்லது ரன்கள் அடிக்கும் போது, மிக வித்தியாசமான நடனம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பிராவோ, தற்போது புஷ்பா பாடலில் நடனத்தை போட்டு மீண்டும் வைரலாகி இருக்கிறார்.

இதோ அந்த வீடியோ - 


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.