கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்க... நாங்க இந்தியாவை நிச்சயம் வீழ்த்துவோம்... - பொல்லார்ட் சபதம்

Pollard sports-cricket- confident
By Nandhini Jan 31, 2022 08:21 AM GMT
Report

இந்திய சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ரோஹித் ஷர்மா, துணைக் கேப்டனாக கே.எல்.ராகுல் ஆகியோர் செயல்பட இருக்கிறார்கள். விராட் கோலியும் இத்தொடரில், முதல்முறையாக ரோஹித்தின் கேப்டன்ஸியில் விளையாட இருக்கிறார்.

கேப்டனாக ரோஹித் ஷர்மாவுக்கு இது முதல் ஒருநாள் தொடர் என்பதால், அவர் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. பலம் வாய்ந்த இந்திய அணியை சமாளிக்க மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இளம் வீரர்களும், அனுபவ வீரர்களும் கலவையாக இடம்பெற்றிருக்கிறார்கள்.

இத்தொடரில் 2 வருடங்களுக்குப் பிறகு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் கேமர் ரோச் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய பிறகு பேசிய மேற்கிந்தியத் தீவுகள் அணிக் கேப்டன் கெய்ரன் பொல்லாட், இந்திய சுற்றுப் பயணம் குறித்தும் பேசியுள்ளார்.

இது குறித்து அவர், “இங்கிலாந்துக்கு எதிராக மிகச்சிறபாக விளையாடி தொடரை வென்றிருக்கிறோம். இதன்மூலம், இந்தியாவுக்கு எதிராகவும் நிச்சயம் வெற்றிகளைக் குவிப்போம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. நிச்சயம் இரண்டு தொடர்களையும் கைப்பற்றுவோம். ரோஹித் ஷர்மா தலைமையிலான அணியை எதிள்கொள்ள ஆர்வமாக காத்திருக்கிறேன்.எங்கள் அணியில் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பதற்கென்றே தனியாக வீரர்கள் உள்ளனர். இங்கிலாந்து தொடரில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அதே பார்முடன் தயாராக இருக்கிறார்கள். இந்த விஷயங்கள் நிச்சயம் எங்களுக்கு கை கொடுக்கும் என்றார்.