டென்னிஸில் ஆர்வம் காட்டும் தோனி - வைரலாகும் புகைப்படம்

MS Dhoni Viral Photos
By Nandhini Nov 21, 2022 10:45 AM GMT
Report

டென்னிஸில் ஆர்வம் காட்டும் தோனியின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி -

டி20 ஃபார்மெட்டில் நடத்தப்பட்டு வரும் பிரான்சைஸ் லீக் தொடராக ஐபிஎல் இந்திய மட்டுமல்லாது உலகம் முழுவதும் இதற்கான ரசிகர்கள் ஏராளம்.

வரும் 2023ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23-ம் தேதி கொச்சியில் நடக்க உள்ளது. இதில், 10 அணிகளும் தக்க வைத்துள்ள மற்றும் ரிலீஸ் செய்யவுள்ள வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

MS Dhoni

தோனிதான் கேப்டன்

சென்னை அணியின் கேப்டனாக தோனி நீடிப்பார் என்று சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் கூறினார்.

இது குறித்து அவர் பேசுகையில், சென்னை அணிக்காக அவர்கள் அளித்த பங்களிப்பு எப்போதும் நினைவில் இருக்கும். அவர்களில் யாரையாவது ஏலத்தில் மீண்டும் எடுக்க வாய்ப்பு கிடைத்தால் அதை செய்வோம்.

2023-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணியை தோனி வழிநடத்துவார். அவர் தனது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அணியும் நன்றாக செயல்படும் என்றார்.

டென்னிஸில் ஆர்வம் காட்டும் தோனி

இந்நிலையில், எம்.எஸ்.தோனி டென்னிஸில் கவனம் செலுத்தி வருகிறார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.