‘ஒரே கையில் செய்த சாகசம்...’ - மிரள வைத்த மேக்ஸ்வேலின் கேட்ச் - வைரலாகும் வீடியோ
ஆஸ்திரேலியாவின் மிகவும் முக்கியமான டி20 லீக் தொடர்களில் ஒன்று பிக்பேஷ் லீக். இந்த டி20 தொடர் தற்போது நடந்து வருகின்றது.
இதில் நேற்று மெல்பேர்ன் ஸ்டார்ஸ் மற்றும் பிரிஸ்பேயின் ஹீட்ஸ் அணிக்கு எதிராக போட்டி நடந்தது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி போட்டியை வென்று அசத்தி இருக்கிறது.
இப்போட்டியில் மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சின் போது கேப்டன் மேக்ஸ்வேல் பிடித்த கேட்ச் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மெல்பேர்ன் ஸ்டார்ஸ் பந்துவீச்சின் போது, ஆட்டத்தின் 16வது ஓவரை நாதன் கூடர்நைல் வீசினார்.
அவர் வீசிய பந்தை சேம் ஹிஸ்லட் வானத்தை நோக்கி தூக்கி அடித்தார். அப்போது அந்தப் பந்தை மேக்ஸ்வேல் லாவகமாக தாவி ஒரே கையில் பிடித்தார். இந்த கேட்ச் தொடர்பான வீடியோவை ஆஸ்திரேலிய அணியின் டுவிட்டர் கணக்கு பகிர்ந்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்ரவுண்டராக இருக்கும் மேக்ஸ்வேல் அவ்வப்போது இதுபோன்று ஃபில்டிங்கில் அசத்துவது வழக்கம். அந்த வகையில் தற்போது அவர் பிடித்த கேட்ச் இணையத்தில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.
GLENN MAXWELL!
— 7Cricket (@7Cricket) January 16, 2022
WHAT A CATCH! ?#BBL11 pic.twitter.com/czENSVwG2s

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

Tamizha Tamizha: கொண்டாட்டத்தில் கூட நிற்காத அப்பா....அரங்கத்தில் தொகுப்பாளர் கொடுத்த பதில் Manithan
