‘ஏங்கி... ஏங்கி... ஏமாறும் ரசிகர்கள்...’ - விராட் கோலியும், சர்வதேச சதமும்

Nandhini
in கிரிக்கெட்Report this article
இந்திய கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சதம் அடித்து 743 நாட்களுக்கு மேலாகிவிட்டது. இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்றது.
இத்தொடரில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் களமிறங்காத விராட் கோலி 2வது டெஸ்ட் போட்டியில் களம் இறங்கினார்.
முதல் இன்னிங்ஸில் ரன் எதுவும் அடிக்காமலும் 2வது இன்னிங்ஸில் 36 ரன்களுடனும் விராட் கோலி ஆட்டம் இழந்தார். இதனால், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சதம் அடிக்காமல் 2 ஆண்டுகளை விராட் கோலி நிறைவு செய்திருக்கிறார்.
இந்திய கேப்டன் விராட் கோலி உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். இவர் கடைசியாக 2019ம் ஆண்டு ஈடன் கார்டனில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார்.
அதற்கு பின்பு 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கோலி 599 ரன்கள் அடித்திருக்கிறார். அதில் வெறும் 5 முறை மட்டும் அரை சதத்தை கடந்திருக்கிறார். மேலும் 4 முறை டக் அவுட்டும், 4 முறை ஒற்றை இலக்க ஸ்கோருடனும் கோலி அவுட்டாகி இருக்கிறார். இதனால், சர்வதேச கிரிக்கெட்டில் அவர் சதம் கடந்து 743 நாட்களுக்கு மேலாகி இருக்கிறது.
அதேபோல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரை அதிலும் விராட் கோலி சமீபத்தில் சதம் ஏதும் அடிக்கவே இல்லை. கடைசியாக 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் அடித்திருந்தார்.
அப்போட்டியில், விராட் கோலி 114 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதன் பின்னர் தற்போது 27 மாதங்களாக விராட் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி தற்போது வரை 43 சதங்கள் அடித்திருக்கிறார்.
ஆண்டு வாரியாக விராட் கோலியின் ஒருநாள் சதங்கள்:
2009 1
2010 3
2011 4
2012 5
2013 4
2014 4
2015 2
2016 3
2017 6
2018 6
2019 5
2020 0
2021 0
கடைசியாக அவர் 2019ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் 5 சதங்கள் அடித்திருந்தார். அதன் பின்பு, 2 ஆண்டுகளுக்கு மேலாகியும், ஒரு சதம் கூட அடிக்காதது பெரிய வருத்தமாக அமைந்திருக்கிறது.
இனி இந்தாண்டில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி இருக்கிறது. வரும் டிசம்பர் 26ம் தேதி தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகள் இடையே முதல் டெஸ்ட் போட்டி தொடங்க இருக்கிறது. அந்தப் போட்டிலாவது விராட் கோலி சதம் அடிப்பாரா? என்ற ஏக்கம் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.