விராட் கோலி நல்லா இருக்காரு... கடைசி டெஸ்டில் களமிறங்குவார்.. - நம்பிக்கை தெரிவித்த கே.எல்.ராகுல்
கேப்டன் விராட் கோலி வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், 3-வது டெஸ்டில் விளையாட அவர் தகுதியுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் கே.எல் ராகுல் தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.
2-வது டெஸ்டில் கேப்டன் விராட் கோலிக்கு முதுகுவலி காரணமாக அவர் இப்போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக கேப்டன் பொறுப்பை கே.எல்.ராகுல் ஏற்றார்.
விராட் கோலிக்குப் பதிலாக ஹனுமா விஹாரி களமிறங்கினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் இருக்கிறது.
இந்நிலையில், கேப்டன் விராட் கோலி வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், 3-வது டெஸ்டில் விளையாட அவர் தகுதியுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, செய்தியாளர்களிடம் கே.எல்.ராகுல் கூறுகையில், "விராட் கோலி தற்போது நலமுடன் உள்ளார். கடந்த 2 நாட்களாக வலைப் பயிற்சியில் பீல்டிங் செய்தார், ஓடினார், அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், கடைசி டெஸ்டில் அவர் பங்கேற்க அதிக வாய்ப்பு இருக்கிறது. முகமது சிராஜிற்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்க வாய்ப்பு உள்ளது. இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் இருப்பதால் ஒரு பிரச்சினையும் இல்லை. 3-வது டெஸ்டில் வெற்றிபெற கடுமையாக போராடுவோம்" என்றார்.

கருப்பு கொண்டைக்கடலை ஊற வைத்து பச்சையாக சாப்பிட்டால் இந்த நோய் சரியாகும்- யாரெல்லாம் சாப்பிடலாம்? Manithan
