'விராட் கோலி இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த டெஸ்ட் கேப்டன்' - இர்பான் பதான் புகழாரம்

sports-cricket Irfan Pathan koli
By Nandhini Dec 07, 2021 07:35 AM GMT
Report

'விராட் கோலி இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த டெஸ்ட் கேப்டன்' என்று பாராட்டியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி டி20, டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடியது. இந்தப் போட்டியில், இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது.

இப்போட்டியில், 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 எனும் கணக்கில் இந்திய அணி கைப்பற்றி இமாலய சாதனை படைத்துள்ளது.

இதனையடுத்து, மும்பை டெஸ்ட் வெற்றியின் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் இந்தியா அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இப்போட்டியில் வீரர்கள் தேர்வு, பந்துவீச்சில் மாற்றங்கள் என கேப்டன் விராட் கோலி அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார்.

மேலும் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 பிரிவுகளிலும் சர்வதேச அளவில் தலா 50 வெற்றிகளைச் சந்தித்த முதல் வீரர் என்ற பெருமையையும் கேப்டன் விராட் கோலி பெற்றிருக்கிறார்.இதற்காக பலரும் விராட் கோலிக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் இது குறித்து கூறுகையில், ''நான் ஏற்கனவே கூறியது போல் விராட் கோலி இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த டெஸ்ட் கேப்டன். 59.09 என்கிற வெற்றி சதவீதத்துடன் அவர் முதலிடத்தில் இருக்கிறார்' என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.