அடேங்கப்பா... - ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போக இருப்பவர் யார் தெரியுமா?

KL Rahul IPL sports-cricket Mega auction
By Nandhini Nov 29, 2021 08:36 AM GMT
Report

ஐபிஎல் 2022 தொடருக்கான மெகா ஏலம் நடந்து வருகிறது. இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கே.எல்.ராகுலுக்கு லக்னோ அணி ரூ.20 கோடி கொடுக்க தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கடந்த 2018ம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணி ராகுலை ரூ.11 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது. இந்நிலையில், ஐபிஎல் 2022ம் ஆண்டு புதிதாக வந்துள்ள லக்னோ அணி கே.எல்.ராகுலுக்கு இதுவரை யாரும் பெறாத, யாருக்கும் கிடைக்காத, வரலாறு காணாத தொகையான ரூ.20 கோடியை அளிக்க முடிவெடுத்திருப்பதாக ஐபிஎல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறும் முன் நாளைக்குள் அணிகள் தாங்கள் தக்க வைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும், அதே போல் புதிய அணி உரிமையாளர்கள் 3 வீரர்களை ஏலத்துக்கு முன்னாலேயே ஒப்பந்தம் செய்யலாம்.

இந்நிலையில், ஏறக்குறைய லக்னோ அணியின் கேப்டனாகவே கே.எல்.ராகுல் செல்வார் எண்ணும் நிலையில் நட்சத்திர வீரராக அவர் தேர்வு செய்யப்பட்டு ரூ.20 கோடிக்கு அவர் ஒப்பந்திக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஏன் 20 கோடி என்றால் பஞ்சாப் கிங்ஸ் அணியிலேயே ராகுல் இருப்பாரேயானால் அவரை ரூ.16 கோடிக்கு அந்த அணி தக்க வைக்க வேண்டும்.

ஐபிஎல் 2018 முதலே சிறந்த தொடக்க வீரராக ராகுல் இருந்து வருகிறார். 659, 593, 670, 626 என்று ஐபிஎல் தொடர்களில் குவித்து வருகிறார். லக்னோ அணியின் உரிமையாளர்களான ஆர்பிஎஸ்ஜி குரூப் மிகப்பெரிய தொகையான ரூ.7090 கோடி கொடுத்து அணியை எடுத்திருக்கிறது.

ரஷீத் கானுக்கும் ரூ.16 கோடி கொடுக்கத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ரஷீத் கானை ரூ.9 கோடிக்கு தக்க வைத்தது.

இந்த முறை ஹைதராபாத் இவரை தக்க வைத்தால் ரூ.12 கோடிக்குத் தக்க வைக்கப்பட வேண்டும். ராகுல் பஞ்சாப் கிங்சிலிருந்து லக்னோவுக்கு செல்வது ஏறக்குறைய உறுதியான நிலையில் ரஷீத் கான் நிலவரம் என்னவென்று இன்னும் தகவல் வெளியாகவில்லை. 

அடேங்கப்பா... - ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போக இருப்பவர் யார் தெரியுமா? | Sports Cricket Ipl Mega Auction Kl Rahul