பிசிசிஐ போட்ட பிளான் B - நிலவரத்தைப் பார்த்தால் இந்த IPL சீரிஸ் அனைத்தும் அங்கதான் நடக்கும் போல இருக்கே?

IPL BCCI plan sports-cricket
By Nandhini Jan 11, 2022 09:10 AM GMT
Report

இந்தியாவில் கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான IPL போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் 2வது திட்டம் ஒன்றை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டின் ஏப்ரல் - மே மாதங்களில் 15வது IPLபோட்டிகளை இந்தியாவில் நடைபெறுவதாக இந்திய கிரிக்கெட் வாரியமான BCCI முன்னரே அறிவித்தது.

கடந்த சீசனில் மொத்தம் 8 அணிகள் தொடரில் களமிறங்கிய நிலையில், இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் தொடரில் லக்னோ, அகமதாபாத் ஆகிய அணிகள் கலந்து கொண்டன. இதனால் 15வது IPL போட்டியில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்திருக்கிறது. இந்நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

இந்த கொரோனா தொற்று பல்வேறு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மட்டும் இந்தியா முழுவதும் சுமார் 1.35 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை கருத்தில்கொண்டு வீரர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்ததும் நோக்கில் பிளான் பி ஒன்றினை இந்திய கிரிக்கெட் வாரியம் அமைத்திருக்கிறது.

இத்திட்டத்தின்படி, நடப்பாண்டின் அனைத்து ஐ.பி.எல். ஆட்டங்களையும் மராட்டிய மாநிலம் மும்பையில் நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருக்கிறது.

அங்குள்ள வான்கடே மைதானம், பிரபோர்ன் ஸ்டேடியம், நவீன் மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியம் ஆகிய 3 மைதானங்களில் நடத்த திட்டமிட்டிருக்கிறது. போட்டிகள் நடைபெறும் காலத்தில் கொரோனா நிலவரத்தை கொண்டு இந்த பிளான் B செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 12 மற்றும் 13-ந் தேதிகளில் பெங்களூரில் நடைபெறும் என்று முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர வீரர்களை எடுக்கப்போகும் அணிகள் எவை? எவை? என்பதைத் தெரிந்துகொள்ள ஐ.பி.எல் ஆர்வமாக இருக்கிறது.