IPL 2022 - : டாடா நிறுவனம் ஐபிஎல் ஸ்பான்சராக ஒப்பந்தம் - வெளியான தகவல்

sports-cricket sponsor ipl-2022 tata vivo
By Nandhini Jan 11, 2022 10:54 AM GMT
Report

ஐபிஎல் டி20 போட்டிகளின் டைட்டில் ஸ்பான்சராக விவோ நிறுவனத்திற்கு பதில் டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.

டாடா நிறுவனம் ஒப்பந்தம் தொடர்பாக ஐபிஎல் நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

2023ம் ஆண்டு வரை ஐபிஎல் ஸ்பான்சராக சீன நிறுவனமான விவோவிடமிருந்து ஒப்பந்தத்தை டாடா நிறுவனத்திடம் பிசிசிஐ வழங்கி இருக்கிறது. ஐபிஎல் 2022ஆம் வருடத்திற்கான டைட்டில் ஸ்பான்சர் விவோவிலிருந்து டாடாவிற்கு மாற்றம் செய்யப்படுகிறது என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்தார்.

இதனிடையே, 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தின் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. முன்னதாக ஐபிஎல் 14வது சீசன் முடிந்த உடன், புதிதாக லக்னோ, அகமதாபாத் என 2 அணிகள் இணைக்கப்பட்டு 15வது சீசன் முதல் மொத்தம் 10 அணிகள் களமிறங்கும் என்று பிசிசிஐ தகவல் தெரிவித்திருந்தது.

ஏற்கெனவே இருக்கும் 8 அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் குறித்த பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 19 உள்நாட்டு வீரர்கள், 8 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.

புதிதாக இடம்பெறும் இரு அணிகளும் 3 வீரர்களைத் தக்க வைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்ஸர் ஆகிறது டாடா குழுமம் என்பது குறிப்பிடத்தக்கது.