ஐபிஎல் 2022 கிரிக்கெட் போட்டி - புதிய 2 அணிகளில் இணைய உள்ள வீரர்கள் யார் யார்ன்னு தெரியுமா?

IPL 2022 cricket match
By Nandhini Dec 03, 2021 05:40 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐ.பி.எல் கிரிக்கெட்டை திருவிழாவாக கொண்டாடி வருகிறார்கள். ஐபிஎல் கிரிக்கெட் போட்டி 15வது முறையாக அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் களைகட்ட இருக்கிறது.

இந்த முறை கூடுதலாக லக்னோ, அகமதாபாத் அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 10 அணிகளோடு வீரர்கள் களம் இறங்க இருக்கிறார்கள். அத்துடன் ஐ.பி.எல். விதிமுறைப்படி இந்த ஆண்டு மெகா ஏலம் என்பதால் ஏற்கனவே உள்ள 8 அணிகள் தங்களுக்கான அணியில் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்க காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

இதனையடுத்து, ஒவ்வொரு அணிகளும் அதிகாரப்பூர்வமாக தங்களுக்கான வீரர்களை தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த பந்தயத்தில் புதிதாக சேர்ந்துள்ள அணிக்கு தங்கள் அணியின் நட்சத்திர முகம் யார் என்பதை தீர்மானிக்க டிசம்பர் 25ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த 2 அணிகளும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்களிலிருந்து 3 வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம். 2 இந்திய வீரர்கள், 2 வெளிநாட்டு வீரர்கள் என 3 வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம். ஏலத்திற்காக ஒதுக்கப்பட்ட 90 கோடி ரூபாயிலிருந்து 33 கோடி ரூபாய் இந்த 4 வீரர்களுக்காக ஒதிக்கிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

3 வீரர்களுக்கும் அதிகபட்சமாக 15 கோடி ரூபாய், அடுத்த நிலை வீரருக்கு 11 கோடி ரூபாய், கடைசி நிலை வீரருக்கு 7 கோடி என அடிப்படை விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. தங்கள் அணிக்காக சேர்க்கப்படும் வீரர் கேப்டனாக செயல்படும் பட்சத்தில் அவருக்கு 15 கோடி ரூபாய் விலை ஒதுக்கப்படவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

8 அணிகளும் தங்களுக்கான வீரர்களை தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்துள்ளது. இந்நிலையில், விடுவிக்கப்பட்ட நட்சத்திர வீரர்களிடம் பேச்சுவார்த்தை சூடுபிடித்திருக்கிறது

. லக்னோ, அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்ட இந்த 2 அணிகளில் யார் யார் ஈர்க்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிரி இருக்கிறது. லக்னோ அணிக்காக ராகுலும், ரஷித் கானும் போட்டி போட்டுக்கொண்டிருக்க அவர்களை தேர்வு செய்ய இவர்களுக்கான ஏலத்தொகையில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது.

அகமதாபாத் அணி நிர்வாகம் ரெய்னா, ஹர்த்திக், ஸ்ரேயஸ், வார்னர் ஆகிய வீரர்களை தங்கள் அணிக்கு இழுக்கும் முயற்சியில் பிசியாக இருக்கிறது. வீரர்கள் தேர்வு முடிந்தவுடன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஏலத்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கிறது.

15வது சீசன் ஐ பி எல் திருவிழா இந்தியாவில் சொந்த மைதானத்தில் போட்டிகளை நடத்தவும் பிசிசிஐ தீவிரம் காட்டு வருகிறது. ஐ.பி.எல். தொடரில் புதிதாக 2 அணிகள் இணைந்தது 50 புதிய வீரர்களை கூடுதலாக அறிமுகப்படுத்தும் என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும் நேருக்கு நேர் இரண்டு லீக் ஆட்டங்கள் என்றை பழைய நிலை மாற்றப்பட்டிருப்பது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதே மிகபெரிய கேள்வியாக உள்ளது.