ஐபிஎல் கிரிக்கெட் போட்டி - அணிகள் தக்கவைத்துக்கொண்ட வீரர்கள் யார் யார்ன்னு தெரியுமா? இதோ முழு விவரம்

sports-cricket-ipl
By Nandhini Dec 01, 2021 09:26 AM GMT
Report

ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களை தக்க வைத்துக்கொள்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, எந்தெந்த அணி யார் யாரை தக்கவைத்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

சிஎஸ்கே அணி ரவிந்திர ஜடேஜாவுக்கு ரூ.16 கோடியும், டோனிக்கு ரூ.12 கோடியும், மொயின் அலிக்கு ரூ.8 கோடியும், ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ரூ.6 கோடியும் செலவிட்டு அவர்களை தக்க வைத்திருக்கிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் -

பெங்களூர் அணி ரூ.15 கோடி செலவில் கேப்டன் விராத் கோலி, ரூ.11 கோடி செலவில் க்ளின் மேக்ஸ்வெல் ரூ.7 கோடி செலவி எம்.டி.சிராஜ் ஆகியோரை தக்க வைத்துள்ளது.

பஞ்சாப் அணி -

இரண்டு உள்நாட்டு வீரர்களை மட்டுமே தக்க வைத்துள்ளது. ரூ.12 கோடி செலவில் மாயங் அகர்வால், ரூ.4 கோடி செலவில் அர்ஷ்தீப் சிங் ஆகியோரை தக்க வைத்து கொண்டுள்ளது.

மும்மை இந்தியன்ஸ் அணி -

ரூ.16 கோடி செலவில் கேப்டன் ரோகித் சர்மா, ரூ.12. கோடி செலவில் ஜஸ்பிரித் பும்ரா, ரூ.8 கோடியில் சூர்யகுமார் யாதவ், ரூ.6 கோடியில் பொல்லார்ட் ஆகியோரை தக்க வைத்து கொண்டுள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி -

ரூ.14 கோடி செலவில் கேன் வில்லியம்சன், ரூ.4 கோடி செலவில் அப்துல் சமத், ரூ.4 கோடி செலவில் உம்ரன் மாலிக் ஆகியோரை தக்க வைத்து கொண்டுள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி -

ரூ.16 கோடி செலவில் ரிஷப் பண்ட், ரூ.9 கோடி செலவில் அக்சார் படேல், ரூ.7.50 கோடி செலவில் பிரித்வி ஷா, ரூ.6.50 கோடி செலவில் அன்ரிச் நார்ட்ஜே ஆகியோரை தக்க வைத்து கொண்டுள்ளது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி -

ரூ.12 கோடி செலவில் ஆந்த்ரே ரசல், ரூ. 8 கோடி செலவில் வருன் சக்கரவர்த்தி, ரூ.8 கோடி செலவில் வெங்கடேஷ் அய்யர், ரூ.6 கோடி செலவில் சுனில் நரேன் ஆகியோரை தக்க வைத்து கொண்டுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி -

ரூ.14 கோடி செலவில் சஞ்சு சாம்சன், ரூ.10 கோடி செலவில் ஜோஸ் பட்லர், ரூ.4 கோடி செலவில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரை தக்க வைத்து கொண்டுள்ளது.

வீரர்களை தக்க வைப்பதற்காக செலவிடப்பட்ட தொகை போக தற்போது பெங்களூர் அணியிடம் ரூ.57 கோடியும், மும்பை அணியிடம் ரூ.48 கோடியும், பஞ்சாப் அணியிடம் ரூ.72 கோடியும், ஹைதராபாத் அணியிடம் ரூ.68 கோடியும், சிஎஸ்கே அணியிடம் ரூ.48 கோடியும், டெல்லி அணியிடம் ரூ.47.5 கோடியும், கொல்கத்தா அணியிடம் ரூ. 48 கோடியும், ராஜஸ்தான் அணியிடம் ரூ. 62 கோடியும் மீதமுள்ளன. இந்த தொகைக்குள்தான் பிற வீரர்களை அந்த அணிகள் வாங்க முடியும்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி - அணிகள் தக்கவைத்துக்கொண்ட வீரர்கள் யார் யார்ன்னு தெரியுமா? இதோ முழு விவரம் | Sports Cricket Ipl