இந்திய அணியே வெல்லும்..! அடித்து சொல்லும் முன்னாள் வீரர் பிராட் ஹாக்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியே வெற்றி பெறும் என முன்னாள் வீரரான பிராட் ஹாக் கணித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் படுதோல்வியை சந்தித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
சமபலம் கொண்ட இரு அணிகள் இந்த தொடரில் விளையாடுவதாலும், இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் விளையாட உள்ளதாலும், இந்த தொடருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் துவங்க இன்னும் ஒரு மாதம் இருந்தாலும், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் தற்போதே தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் தெரிவிக்க துவங்கிவிட்டனர்.
அதே போல் இரு அணிகளுக்கும் தேவையான தங்களது ஆலோசனைகளையும் முன்னாள் வீரர்கள் பலர் வழங்கி வருகின்றனர். இந்தநிலையில், முன்னாள் வீரரான பிராட் ஹாக், இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரில் இந்திய அணியே வெல்லும் என ஆரூடம் தெரிவித்துள்ளார்.
இந்தியா இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 4ம் தேதி துவங்க உள்ளது.
India have a point to prove. England batting still not stable also gives them a big opportunity to upset the home team. #INDvENG https://t.co/zHA7F3aDV3
— Brad Hogg (@Brad_Hogg) July 5, 2021