மும்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா இமாலய வெற்றி

sports-cricket- India wins
By Nandhini Dec 06, 2021 05:16 AM GMT
Report

மும்பையில் நடைபெற்று வரும் இந்தியா- நியூசிலாந்து டெஸ்ட் போட்டி இறுதிகட்ட போட்டியில், நியூசிலாந்திற்கு 540 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

540 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து, 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தது.

இந்நிலையில், இன்னும் 5 விக்கெட்டுகள் எடுத்தால் 2வது டெஸ்ட் போட்டியையும் வென்று டெஸ்ட் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் களம் இறங்கியது இந்திய அணி. இன்று தொடங்கிய போட்டியில், 45 நிமிடங்களுக்குள் ஜெயந்த யாதவின் பந்துவீச்சில் அடுத்தடுத்து 4 விக்கெடுகள் விழ, கடைசியாக அஷ்வின் பந்துவீச்சில் 10வது விக்கெட் விழுந்து போட்டியையும், தொடரையும் கைப்பற்றி இந்திய அணி அசத்தி இருக்கிறது.

இதனால், டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டம் தொடங்கி ஒரு மணி நேரத்திற்குள் போட்டியை இந்திய அணி முடித்துள்ளது. இந்திய பெளலர்களைப் பொறுத்தவரை 2வது இன்னிங்ஸில், அஷ்வின், ஜெயந்த் யாதவ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் எடுக்க, அக்சர் படேல் 1 விக்கெட்டை எடுத்தார். டிராவிட் பயிற்சியாளராக பொறுப்பேற்று விளையாடிய முதல் டி20, டெஸ்ட் தொடர்களை இந்திய அணி வென்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.