Sunday, Jul 6, 2025

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணிக்கு கிடைத்த சரியான அடி - இதோ முழு விவரம்

icc ranking india team sports-cricket
By Nandhini 3 years ago
Report

ஆஷஸ் தொடரில் அபாரமாக விளையாடி 4-0 என தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

தென்னாப்பிரிக்காவிடம் தோற்ற இந்திய அணி, முதலிடத்திலிருந்து 3ம் இடத்திற்கு பின் தங்கி இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற நியூசிலாந்து அணியை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.

ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மட்டும் வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் தோற்று தொடரை இழந்துள்ளது.

இந்திய அணி தோல்வியடைந்த அதேவேளையில், ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக அபாரமாக விளையாடி 4-0 என ஆஷஸ் தொடரை வென்றது ஆஸ்திரேலிய அணி.

எனவே ஆஸ்திரேலிய அணி முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது. தென்னாப்பிரிக்காவிடம் தோற்ற இந்திய அணி முதலிடத்திலிருந்து 3ம் இடத்திற்கு பின் தங்கி இருக்கிறது.

தென்னாப்பிரிக்காவிடம் அடைந்த தோல்வி, இந்திய அணிக்கு ஐசிசி டெஸ்ட் தரவரிசை மட்டுமல்லாது, டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலிலும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 119 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்திலும், 117 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி 2ம் இடத்திலும் இருக்கின்றன. 116 புள்ளிகளுடன் இந்திய அணி 3ம் இடத்தில் இருக்கிறது. ஆஷஸ் தொடரில் படுதோல்வி அடைந்த இங்கிலாந்து அணி 101 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் இருக்கிறது. உள்ளது.