ஐசிசியின் மாதாந்திர சிறந்த கிரிக்கெட் வீரர் யார்? யார்ன்னு தெரியுமா? பரிந்துரைப்பட்ட பெயர்கள்

sports-cricket-icc
By Nandhini Dec 08, 2021 06:22 AM GMT
Report

நவம்பர் மாதத்தின் ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு அதிரடி ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர், நியூசிலாந்தின் அபார ஸ்விங் பவுலர் டிம் சவுதீ ஆகியோர் உட்பட சில வீரர்கள் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதே போல் பெண்கள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் இடது கை ஸ்பின்னர் ஆனம் அமின், பங்களாதேஷின் நஹிதா அக்தர் ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. ஆடவர் கிரிக்கெட் பிரிவில் பங்களாதேஷுக்கு எதிராக கலக்கும் பாகிஸ்தான் தொடக்க வீரர் அபிட் அலி பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இவர் 133 மற்றும் 91 என்று பாகிஸ்தான் வெற்றி பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் அசத்தலாக ஆடியுள்ளார்.

டேவிட் வார்னர் டி20 உலகக்கோப்பையில் மீண்டும் பார்முக்கு வந்து அசத்த, ஆஸ்திரேலியா உலக டி20 கோப்பையை முதன் முதலாக கைப்பற்றி இமாலய சாதனை படைத்தது. ஆஷஸ் தொடரில் இன்று ஜோ ரூட்டுக்கு அற்புதமான கேட்சை எடுத்துள்ளார்.

டிம் சவுதீ இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் கேன் வில்லியம்சன் இல்லாத நிலையில் கேப்டன்சி செய்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்மூர் மட்டைப் பிட்சில், குழிப்பிட்சில் அற்புதமாக ஸ்விங் செய்து இந்திய பேட்ஸ்மென்களின் எட்ஜ்களைப் பிடித்துள்ளார். 

ஐசிசியின் மாதாந்திர சிறந்த கிரிக்கெட் வீரர் யார்? யார்ன்னு தெரியுமா? பரிந்துரைப்பட்ட பெயர்கள் | Sports Cricket Icc