இறந்த தந்தையை நினைத்து உருகிய ஹர்திக் பாண்டியா - வைரலாகும் வீடியோ

death father Hardik Pandya viral-video ஹர்திக் பாண்டியா இறந்த தந்தை நினைவுநாள்
By Nandhini Feb 18, 2022 11:54 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியா சமூகவலைத்தளத்தில் அவ்வப்போது வீடியோ வெளியிடுவார். இவர் வெளியிடும் வீடியோ ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகும். 

சமீபத்தில் ஹர்திக் பாண்டியா தன்னுடைய பாட்டியுடன் ‘புஷ்பா’ பட பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலாக பரவியது. 

ஹர்திக் பாண்டியாவின் தந்தை ஹிமான்ஷு, கடந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். 

தன் தந்தையை நினைத்து தற்போது ஹர்திக் பாண்டியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில், வீட்டிற்குள் நுழைந்த ஹர்திக், அயர்ந்து தூக்கிக்கொண்டிருந்த தன் தந்தையை எழுப்புகிறார். தூக்க கலக்கத்தில் இருந்த தந்தை விழித்து சட்டென்று தன் மகனை பார்த்த அவர் கட்டி அணைத்து கழுவுகிறார். 

தந்தை இறந்து முதலாம் ஆண்டு நினைவு நாளில், ஹர்திக் பண்டியா இன்ஸ்டாவில்,  ‘I wish I can get a surprise from you like this daddy ❤️ ’ என்று பதிவிட்டு இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவிற்கு அவரது ரசிகர்கள் பலர் ஆறுதல் கூறி வருகின்றனர்.