‘வீட்டில் நீங்க எப்படி..?’ - ரசிகர் கேட்ட கேள்விக்கு செம்ம கூலாக பதிலளித்த தோனி - வைரலாகும் வீடியோ

MS Dhoni sports-cricket தோனி ரசிகர் fans-question Cool Answer கேள்வி
By Nandhini Mar 17, 2022 06:39 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் உலகில் மணிசூடா மன்னராக வலம் வந்தவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனி. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி தோனி, சாக்‌ஷி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரசிகர்களின் விருப்பமான இந்த தம்பதியினருக்கு ஷிவா என்ற மகள் உள்ளார்.

தோனியின் சப்போர்ட்டர் என்ற வகையில், வாழ்க்கை முறையை தாண்டி கிரிக்கெட் விளையாடும் மைதானங்களிலும் சாக்‌ஷி செய்யும் ஆரவாரத்தை நம்மால் பார்க்க முடியும்.

‘வீட்டில் நீங்க எப்படி..?’ - ரசிகர் கேட்ட கேள்விக்கு செம்ம கூலாக பதிலளித்த தோனி - வைரலாகும் வீடியோ | Sports Cricket Fans Question Dhoni Answer

இந்நிலையில், தோனியிடம் அவரது ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, தோனி செம்ம கூலாக பதில் அளித்துள்ளார்.

தோனியிடம் ரசிகர், அனைவருக்கும் தெரியும் களத்தில் நீங்கள் தான் ‘நம்பர் ஒன்’ என்று.. ஆனால், வீட்டில் எப்படி? என்று கேட்டார். அதற்கு தோனி, அனைவருக்கும் தெரியும் வீட்டில் மனைவிதான் ‘நம்பர் ஒன்’ என்று பதிலளித்துள்ளார்.

இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.