தோனியிடம் இருக்கும் கெட்ட பழக்கம் இதுதான் - ஹர்பஜன்சிங் காட்டம்
2007ம் ஆண்டு உலகக்கோப்பை டி20-யை தோனியின் கேப்டன் பதவியில் வென்றோம் இல்லை என்று கூறவில்லை, ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் சேவாகைக் கண்டாலே மிரளும் பாகிஸ்தானுடனான இறுதிப்போட்டியில் அவரை உட்கார வைத்து யூசுப் பதானை ஓப்பனிங்கில் இறக்கினார் தோனி. யூசுப் பதான் சொதப்பி அவுட் ஆனதுதான் மிச்சம்.
இது மட்டுமல்ல, 2008-ல் முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவில் சவுரவ் கங்குலி, ராகுல் திராவிட்டை நீக்கிவிட்டார். அப்போது முத்தரப்பு தொடரை இந்தியா வெற்றி பெற்றது.
ஆனால் தோனியின் பங்களிப்பு பெரிதாக அதில் கிடையாது. பைனலில் சச்சின் டெண்டுல்கர் 2 மேட்ச்களிலும் வெளுத்து வாங்கினார்கள். அதனால்தான் வெற்றி கிடைத்தது.
சேவாகும் இல்லை, ராபின் உத்தப்பாவை கொண்டு வந்தார். அவரை சச்சின் டெண்டுல்கர் திட்டித் திட்டியே ஆட வைத்தார். ரெய்னா, கம்பீர் போன்றவர்களை தோனி கொண்டு வந்து 2011 உலகக்கோப்பையில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், அதிலும் சேவாக், சச்சின், யுவராஜ் பங்களிப்புகளை மறக்கவே
முடியாது. மேலும், 2011ம் ஆண்டு உலகக்கோப்பையில் இறுதிப் போட்டியில் கணக்காக யுவராஜ் சிங்கிற்கு முன்னதாக இறங்கிய தோனி மற்ற போட்டிகளில் ஒன்றும் பெரிதாக ஆடவே இல்லை. சொதப்பியே ஆடினார்.
2012ம் ஆண்டு சிபி தொடரில் ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு தொடரிலும் சரி சேவாக், சச்சின், கம்பீர் மூவரையும் அணியில் வைத்துக் கொள்ள முடியாது என்றும் ரொடேட் செய்வேன் என்றும் கூறி அந்த முடிவு சொதப்பலாக அந்தத் தொடரை இந்தியா இழந்து விட்டது. தோனியும் பெரிதாக பேட்டிங்கில் பங்களிப்பு கொடுக்கவில்லை.
2015ம் ஆண்டுக்கு அணியை பில்ட் அப் செய்கிறேன் பேர்வழி என்று சேவாக், சச்சின், கம்பீர் மூவருமே இல்லாமல் இவரும் ஒன்றும் பேட்டிங் பங்களிப்பு செய்யாமல் இந்திய அணி 2015 உலகக்கோப்பையில் தோற்றது. இந்நிலையில், ஹர்பஜன் சிங் உடைத்த விஷயம் என்னவெனில் 2011ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஹர்பஜன் தன் இடத்தை இழந்தார்.
2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி, 2015ம் ஆண்டு உலகக்கோப்பை என்று ஹர்பஜன் அணியில் தேர்வாகவில்லை. அடுத்த 5 ஆண்டுகளுக்கு அணிக்குள் வருவதும் போவதுமாக இருந்து வந்தார்.
இது குறித்து ஹர்பஜன்சிங் பேசுகையில், தன்னை அணியிலிருந்து நீக்கியதையடுத்து, நான் தோனியிடம், ஏன் என்னை தேர்வு செய்யவில்லை என்ன காரணம் என்று கேட்டேன். ஆனால் ஒரு பதில் கூட அவரிடமிருந்து வரவில்லை.
பதில் அளிக்க மாட்டேன் என்று ஒருவர் இருக்கும் போது என்னை இப்படி நடத்தியதற்கான காரணத்தை நான் அவரிடம் கேட்டு என்ன பயன்? என்னை நீக்க யார் காரணம்? கேட்டேன் பதிலில்லை. யாருமே எதற்கும் பதில் சொல்லவில்லை என்றால் கேள்வி கேட்டு என்ன பயன் என்று விட்டுவிட்டேன்” என்றார்.