Sunday, Jul 20, 2025

‘தடைகளை கடந்தால்தான் மகத்துவம்...’ - தோனி நடித்த விளம்பர படத்தை பாராட்டிய சேவாக், சமந்தா - வைரல் வீடியோ

sports cricket dhoni advertising
By Nandhini 3 years ago
Report

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கல்வி சார்ந்த விளம்பரப் படம் ஒன்றில் நடித்திருக்கிறார். இந்த விளம்பர வீடியோவில் ரயில் ஒன்றை விரட்டியபடி முந்திச் செல்கிறார் தோனி.

அந்த விளம்பரப் படத்தின் முடிவில் தடைகளை கடந்தால் தான் மகத்துவம் படைக்க முடியும் என்ற கேப்ஷன் வருகிறது. 1.25 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பார்வையாளர்களின் கவனத்தை இந்த வீடியோ ஈர்த்துள்ளது. இந்த வீடியோ குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக், நடிகை சமந்தா கூட ட்வீட் செய்து தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

“வாவ்! இது ஹெலிகாப்டர் ஷாட் போல சிறப்பாக உள்ளது தோனி” என சேவாக் சொல்லியுள்ளார்.

“இது வாழ்க்கைக்கான பாடம்” என்று சமந்தா கூறியுள்ளார்.

ஆன்லைன் மூலம் கல்வி போதிக்கும் தளமான UNACADEMY நிறுவனத்திற்காக இந்த விளம்பரப் படத்தில் தோனி நடித்திருக்கிறார்.

தற்போது இந்த வீடியோ 4.3 மில்லியன் வியூஸ்களை கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது. இதோ அந்த வீடியோ -