முதல் டெஸ்ட் போட்டி - வேறலெவலில் கலக்கிய பும்ரா - வைரலாகும் வீடியோ
தென்னாப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தென்னாப்பிரிக்க அணிக்கு 305 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்களாக மார்க்கரம் மற்றும் கேப்டன் டீன் எல்கர் வந்தனர். 1 ரன்களில் மார்க்கரம் வெளியேற, 17 ரன்கள் எடுத்திருந்த கீகன் பீட்டர்சனும் சிராஜ் பந்து வீச்சில் பண்ட்டிடம் கேட்ச் ஆனார்.
இந்தநிலையில், வான் டெர் டுசெனுக்கு எதிராக பும்ரா வீசிய பந்து ஸ்டம்பை பதம் பார்த்த காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், பும்ரா வீசிய பந்து ஒன்றை வான் டெர் டுசென் உள்ளே வராது என்று விட அது இன் ஸ்விங் ஆகி நேராக போல்ட்டானது.
இதை எதிர்பார்க்காத வான் டெர் டுசென் அவுட் ஆனது அவருக்கே பெரிய அதிர்ச்சியாக இருந்தது. 4வது நாள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 94 ரன்களுடன் தடுமாறிக்கொண்டு வருகிறது.
தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக 52 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருக்கிறார். இந்திய அணி சார்பில் பும்ரா 2 விக்கெட்களும், பும்ரா மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட்களும் கைப்பற்றி இருக்கின்றனர்.
இன்றைய போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அனைத்து விக்கெட்களையும் கைப்பற்றும் பட்சத்தில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Bumrah Special ?? pic.twitter.com/kxkDDzvsrs
— Jayesh (@jayeshvk16) December 29, 2021