இதுதான் சார் நல்ல மனசு... அஸ்வின் விடுத்த கோரிக்கை - டுவிட்டரில் பலன் அடைந்த அஜாஸ் பட்டேல்
கடந்த 2011ம் ஆண்டு முதல் டுவிட்டர் தளத்திலிருந்து வரும் அஜாஸ் படேலை 13,000 பேர் பின் தொடர்கிறார்கள். அதோடு, நியூசிலாந்துக்காக 11 டெஸ்ட் போட்டி மற்றும் 7 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அஜாஸ் படேலுக்கு டுவிட்டரில் ப்ளு டிக் இதுவரை வழங்கப்படவில்லை.
இந்நிலையில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், அஜாஸ் பட்டேலின் ட்விட்டர் கணக்கை மேற்கோள் காட்டி பிரமாண்ட சாதனை படைத்த அவருக்கு வெரிஃபைட் டிக் (verified account) வழங்க வேண்டும் என்று டுவிட்டரிடமே வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், அவரது வேண்டுகோளை ஏற்று டுவிட்டர் வலைதளமும் அஜாஸ் பட்டேல் கணக்கிற்கு வெரிஃபைட் டிக் கொடுத்திருக்கிறது. அதுமட்டுமின்றி ரவிச்சந்திரன் அஷ்வின் போட்ட அந்த டுவிட் மூலமாக அஜாஸ் பட்டேல் டுவிட்டர் கணக்கிற்கு பின்பற்றுபவர்களின் (Followers) எண்ணிக்கை தற்போது அதிகரித்து கொண்டு வருவகிறது.
Dear @verified , a ten wicket bag in an innings definitely deserves to be verified here! ? @AjazP
— Ashwin ?? (@ashwinravi99) December 6, 2021
Thank you @verified ?
— Ashwin ?? (@ashwinravi99) December 6, 2021