அஸ்வின் படைத்த சாதனை - உலக அளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் முன்னேறினார்

உலக அளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் 13-வது இடத்தை பெற்றார் அஸ்வின். அனில் கும்ப்ளே 4ம் இடத்தில் இருக்கிறார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக நடைபெறும் 1வது டெஸ்ட் போட்டி இன்று கடைசி நாள். இப்போட்டியின் கடைசி நாளான இன்று ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 418வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி ஹர்பஜன் சிங் (417) எண்ணிக்கையைக் கடந்துள்ளார்.

நியூசிலாந்து அணி 120/3. வில்லியம்சன் 22 ரன்களுடன் ஆடி வருகிறார் ராஸ் டெய்லர் இப்போதுதான் இறங்கி இருக்கிறார். 2வது இன்னிங்சிலும் அரை சதம் கண்டு வலுவாகச் சென்று கொண்டிருந்த டாம் லேதம் (52) விக்கெட்டை வீழ்த்தி 418-வது டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றியிருக்கிறார் அஸ்வின்.

இந்திய லெஜண்ட் பவுலிங் வரிசையான அனில் கும்ப்ளே (619), கபில் தேவ் (434) வரிசையில் தற்போது ஹர்பஜன் சிங்கைக் கடந்து 418 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 3ம் இடத்தில் முன்னேறி இருக்கிறார் அஸ்வின். முதலிடம் பெற தகுதி பெற்ற ஒரு பவுலர் அஸ்வின் என்பதில் சந்தேகம் கிடையாது.

அஸ்வின் 80 டெஸ்ட் போட்டிகளில் 418 விக்கெட்டுகளை எடுத்தார், ஹர்பஜன் சிங் 103 டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உள்ளார். உலக அளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் 13-ம் இடத்தில் உள்ளார் அஸ்வின். அனில் கும்ப்ளே 4-ம் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்