தோனியை சந்தித்த நடிகர் விக்ரம்... வைரலாகும் புகைப்படங்கள் !
கிரிக்கெட் வீரர் தோனியை நடிகர் விக்ரம் சந்தித்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.
இவர் மாறுப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். தற்போது விக்ரம் ‘பொன்னியின் செல்வன்’, ‘மகான்’, ‘கோப்ரா’ உள்ளிட்ட சில படங்கள் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பிரபல கிரிக்கெட் வீரரான தோனியை நடிகர் விக்ரம் சந்தித்து பேசி இருக்கிறார். மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பின் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தோனி, நடிகர் விக்ரம் இடையேயான சந்திப்பு ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.