விபத்தில் சிக்கினார் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்ன் - ரசிகர்கள் சோகம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் லெஜண்ட், லெக் ஸ்பின்னர் ஷேன் வார்ன் மோட்டார் பைக் விபத்தில் சிக்கி படுகாய அடைந்துள்ளார்.
நேற்று ஷேன் வார்ன் தன் மகன் ஜேக்சனுடன் 300 கிலோ எடை கொண்ட பைக்கில் மெல்போர்னுக்குச் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, அவர் விபத்துக்குள்ளானார்.
விபத்தில் இவரது பைக் சுமார் 15 அடி சறுக்கிக் கொண்டு சென்றது. இந்த விபத்தில், அவரது இடுப்பு, பாதம், கணுக்கால் ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, உடனடியாக அவர் மருத்துவமனைக்குச் செல்லவில்லை.
ஆனால், இன்று அவருக்கு கடும் வலி ஏற்படவே மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆஷஸ் தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கும் ஷேன் வார்ன் இந்த விபத்தினால் கமெண்ட்ரிக்கு உடனடியாக வருவாரா அல்லது 2வது டெஸ்ட் போட்டிக்குத்தான் வருவாரா என்பது பற்றி எந்தத் தகவலும் வெளியாகவில்லை. ஆஷஸ் தொடரே சிக்கலில் உள்ளது, காரணம் புதிதாகப் பரவி வரும் கொரோனா உருமாறிய மைக்ரான் வைரஸ்தான். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும்,
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.