இணையத்தை கலக்கும் பீஸ்ட் பட்லர்... - ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டுவிட் செய்து கொண்டாட்டம் - வைரலாகும் புகைப்படம்

IPL 2022
4 வாரங்கள் முன்

ஐபிஎல் 2வது குவாலிபையர் போட்டியில் படுதோல்வி அடைந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது.

நேற்று அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில், தன்னுடைய உறுதியான பேட்டிங் முயற்சியால் ராஜஸ்தான் ராயல்ஸ் குவாலிஃபையர் 2ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதனையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, ஹர்திக் பாண்டியாவின் குஜராத் டைட்டன்ஸ் அணியை நாளை (ஞாயிற்றுக்கிழமை) எதிர்கொள்கிறது.

இந்நிலையில், பெங்களூரு அணிக்கு எதிரான Qualifier போட்டியில் சதமடித்து ராஜஸ்தான் வெற்றியை பட்லர் உறுதி செய்த நிலையில், விஜய்யின் பீஸ்ட் பட போஸ்டரில் பட்லர் முகத்தை வைத்து பதிவிட்டு பட்லரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டு கொண்டாடி வருகிறது.

தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் விஜய் முகத்திற்கு பதிலாக பட்லர் முகத்தை வைத்தும், கையில் துப்பாக்கிக்கு பதிலாக பேட்டை வைத்தும் சித்தரித்துள்ளனர். தற்போது இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குக்களை தெறிக்க விட்டு வருகின்றனர். 

இணையத்தை கலக்கும் பீஸ்ட் பட்லர்... - ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டுவிட் செய்து கொண்டாட்டம் - வைரலாகும் புகைப்படம் | Sports Cricket


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.