தோல்விக்கு முக்கிய காரணம் முகமது சிராஜின் மோசமான பந்துவீச்சுதான்... - பெங்களூர் அணி பயிற்சியாளர் ஆவேசம்

By Nandhini May 28, 2022 11:49 AM GMT
Report

ஐபிஎல் 2வது குவாலிபையர் போட்டியில் படுதோல்வி அடைந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது.

நேற்று அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில், தன்னுடைய உறுதியான பேட்டிங் முயற்சியால் ராஜஸ்தான் ராயல்ஸ் குவாலிஃபையர் 2ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதனையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, ஹர்திக் பாண்டியாவின் குஜராத் டைட்டன்ஸ் அணியை நாளை (ஞாயிற்றுக்கிழமை) எதிர்கொள்கிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் பந்துவீச்சில் மிகவும் சொதப்பிய முகமது சிராஜ் நிச்சயம் முழு பலத்துடன் மீண்டு வருவார் என்று பெங்களூர் அணியின் பயிற்சியாளர் மெக் ஹசன் தெரிவித்திருக்கிறார்.

மேலும், இது குறித்து மெக் ஹசன் பேசுகையில், “முகமது சிராஜிற்கு இந்த தொடர் சிறப்பானதாக அமையவே இல்லை. ஆனால் முகமது சிராஜ் சிறந்த பந்துவீச்சாளர். நிச்சயமாக முகமது சிராஜ் இதிலிருந்து முழு பலத்துடன் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. முகமது சிராஜ் புதிய பந்தில் விக்கெட் வீழ்த்தி கொடுக்க தவறி விட்டார்.

அவரால் பந்தை அவ்வளவாக ஸ்விங்கும் செய்ய முடியவே இல்லை. இதனால் அவர் தன் மீதான நம்பிக்கையை இழந்திருப்பார் என்று நான் நினைக்கிறேன். ஆனால், அவர் நிச்சயமாக இதிலிருந்து மீண்டு வருவார் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை” என்று தெரிவித்துள்ளார். 

தோல்விக்கு முக்கிய காரணம் முகமது சிராஜின் மோசமான பந்துவீச்சுதான்... - பெங்களூர் அணி பயிற்சியாளர் ஆவேசம் | Sports Cricket