கோலி பேட்ஸ்மேனா இருக்கட்டும்... கே.எல். ராகுலுக்கு நிறைய கேப்டன் வாய்ப்பு கொடுங்க - கவுதம் கம்பீர் பேட்டி

sports-cricket
By Nandhini Jan 10, 2022 07:08 AM GMT
Report

 கே.எல். ராகுலுக்கு இன்னும் நிறைய கேப்டன் வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலி முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் பங்கேற்கவில்லை.

தற்காலிக கேப்டனாக கே.எல். ராகுல் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த விவகாரம் தற்போது முன்னாள் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

240 ரன்கள் தென்னாப்பிரிக்க அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட பிறகு, அதனை உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து கேஎல் ராகுல் கட்டுப்படுத்தவில்லை. வெற்றியை எளிதாக விட்டுக் கொடுத்துள்ளார்.

மேலும் 1992ம் ஆண்டிற்குப் பிறகு ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது கிடையாது. அத்தகைய சாதனையையும் கே.எல். ராகுல் விட்டுக் கொடுத்துள்ளார்.

இதனால் அவர் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்தவில்லை மற்றும் சரியான இடத்தில் பீல்டிங் நிற்க வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

இதற்கிடையில் கே.எல். ராகுலுக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்றும், அப்போதுதான் அவர் நிறைய கற்றுக் கொள்வார் என்றும் கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது -

“நிச்சயம் விராட் கோலி ஒரு பேட்ஸ்மேனாக மிஸ் செய்திருப்போம். ஏனெனில் ஜோ ரூட், வில்லியம்சன் போன்ற உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக விராட் கோலி உள்ளார்.

அவர் என்ன பார்மில் உள்ளார் என்பது கவலை கிடையாது. நிச்சயம் அணியில் இல்லை என்றால் பெருத்த பின்னடைவுதான். அதே போல் விராட் கோலியை ஒரு கேப்டனாக நிச்சயம் இந்திய வீரர்கள் மிஸ் செய்திருப்பார்கள்.

அவர் நிறைய அனுபவமும் ஆக்கத்தையும் கொண்டிருக்கிறார். அவர் அணியில் இருந்தால் எந்த நிலையிலும் இந்திய அணி சோர்வடையாது. கே.எல். ராகுல் அனுபவம் இல்லாமல் சில தவறுகள் செய்துள்ளார்.

அதை நாம் பொருட்படுத்த வேண்டாம். இன்னும் நிறைய வாய்ப்புகள் கொடுத்தால், நல்ல அனுபவத்தை பெற்றுக் கொள்வார். லிமிடெட் ஓவர் போட்டிகளில் பீல்டிங் நிற்க வைப்பது பெரிய சவாலாக இருந்திருக்காது.

ஆனால், டெஸ்ட் போட்டிகளில் அதுதான் மிகவும் முக்கியம். அப்போதுதான் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். இல்லையெனில், 5 நாட்களும் ஒரே அணி பேட்டிங் செய்யும் அளவிற்கு சென்றுவிடும்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.