2021ல் இந்த இந்திய வீரர் தான் பெஸ்ட் பவுலர்.. பும்ரா கிடையாது - மனம் திறந்து பேசிய ஆஸ்திரேலிய ஜாம்பவான்

sports-cricket
By Nandhini Jan 10, 2022 06:44 AM GMT
Report

2021ல் ரவிச்சந்திரன் அஸ்வின் தான் மிகச் சிறந்த பந்துவீச்சாளர் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார்.

2021ம் ஆண்டு இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்தது. ஏனென்றால், கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு பிறகு, சர்வதேச டி20 போட்டிகளில் மீண்டும் இடம்பிடித்திருக்கிறார்.

மேலும் 2021ம் ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்ட, தென்னாப்பிரிக்க அணியுடன் ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியிலும் இடம் பிடித்திருக்கிறார்.

2021ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் 54 விக்கெட்டுகள் உடன் முதலிடத்தில் உள்ளார். இதற்கு அடுத்த இடங்களில் பாகிஸ்தான் அணியை சேர்ந்த சாகின் அப்ரிடி மற்றும் ஹசன் அலி இருவரும் 47 மற்றும் 41 விக்கெட்டுகள் முறையே எடுத்து 2வது மற்றும் 3வது இடங்களில் உள்ளனர்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் மற்றும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மீண்டும் இடம் என அஸ்வினுக்கு ஒரு கனவு ஆண்டாகவே மாறியுள்ளது. குறிப்பாக டி20 உலகக் கோப்பை தொடரிலும் இடம்பெற்று கடைசி 3 போட்டிகளில் அஸ்வின் மிகச் சிறப்பாக பந்து வீசினார். அதைத் தொடர்ந்து நடந்த நியூசிலாந்து அணியுடனான டி20 போட்டிகளில் அபாரமாக பந்து வீசினார்.

இந்நிலையில், 2021ம் ஆண்டு மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் குறித்து தனது கருத்தை தெரிவித்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் கூறியதாவது -

ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கடந்த ஆண்டு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. மேலும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் அவர் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.

ஒரே ஆண்டில் 50 விக்கெட்டுக்கு மேல் எடுப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. அதனை அஸ்வின் சிறப்பாக செய்து காட்டி உள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர்கள் பலரிருக்க அஸ்வின் இத்தகைய சவாலை செய்து முடித்துள்ளது மிகப்பெரிய சாதனையாக பார்க்கிறேன். இந்திய துணைக்கண்டம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கலாம்.

ஆனால் வெளிநாட்டு மைதானங்கள் அப்படி கிடையாது. அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அஸ்வின் நன்றாக விளையாடி இருக்கிறார். தற்போது தென்னாப்பிரிக்கா அணியுடனான தொடரிலும் கட்டுப்படுத்தி ஒருசில விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். ஆகையால், எந்த வித சந்தேகமுமின்றி கடந்த ஆண்டின் சிறந்த பந்துவீச்சாளராக அவரை நான் கருதுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும், பேசிய அவர், 2021 ஆம் ஆண்டில் 1708 ரன்களை டெஸ்ட் போட்டிகளில் அடித்த ஜோ ரூட், அந்த ஆண்டின் சிறந்த பேட்ஸ்மேனாக அவர் தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.

2021ல் இந்த இந்திய வீரர் தான் பெஸ்ட் பவுலர்.. பும்ரா கிடையாது - மனம் திறந்து பேசிய ஆஸ்திரேலிய ஜாம்பவான் | Sports Cricket