மும்பை இந்தியன்ஸ் அணி நட்சத்திர வீரர் டி காக்கிற்கு குழந்தை பிறந்தது - வைரலாகும் புகைப்படம்

By Nandhini Jan 07, 2022 09:45 AM GMT
Report

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் குயிண்டன் டி காக்குக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்பவர் குயிண்டன் டி காக். இவர் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடுகிறார்.

குயிண்டனுக்கும் சாஷா என்ற பெண்ணிற்கும் கடந்த 2016ல் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் குயிண்டன் - சாஷா தம்பதிக்கு நேற்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த மகிழ்ச்சியான தகவலை குயிண்டன் தனது சமூகவலைதளத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். குழந்தைக்கு கியாரா என பெயர் வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் குயிண்டனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.