சும்மா அந்தப் பையனை திட்டாதீங்க… அப்படி தான் விளையாடுவான்.. - ரிஷப் பண்டிற்கு முன்னாள் வீரர் ஆதரவு

sports-cricket
By Nandhini Jan 07, 2022 07:22 AM GMT
Report

தொடர் சொதப்பல் பேட்டிங்கின் மூலம் கடும் விமர்ச்சனத்திற்குள்ளாகி வருகிறார் ரிஷப் பண்ட். அவருக்கு ஆதரவாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் களம் இறங்கியிருக்கிறார்.

தென்னாப்பிரிக்கா சென்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்கா அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றிருக்கிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில், இரு அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி தென்னாப்பிரிக்காவின் செஞ்சூரியன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 202 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 50 ரன்களும், அஸ்வின் 46 ரன்களும் எடுத்தார்கள். இதன்பின்பு முதல் இன்னிங்ஸை துவங்கிய தென்னாப்பிரிக்கா அணி 229 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தென் ஆப்ரிக்கா அணியில் அதிகபட்சமாக பீட்டர்சன் 62 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் ஷர்துல் தாகூர் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து, 2-வது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு ரஹானே 58 ரன்களும், புஜாரா 53 ரன்களும், இறுதி வரை போராடிய ஹனுமா விஹாரி 40 ரன்களும் எடுத்து கொடுத்தாலும் மற்ற பேட்ஸ்மேன்கள் சொல்லி கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்காததால் 266 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி, தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 240 ரன்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இப்போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டம் கடும் விமர்ச்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. குறிப்பாக டக்கென அவுட்டான ரிஷப் பண்ட்டை முன்னாள் வீரர்கள் பலர் மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், முன்னாள் இந்திய வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கரோ ரிஷப் பண்ட்டிற்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.

ரிஷப் பண்ட் குறித்து சஞ்சய் மஞ்சரேக்கர் பேசியதாவது -

“மிக குறுகிய காலத்தில் இந்திய அணிக்காக 2 முக்கிய வெற்றிகளை பெற்று கொடுத்தவர் ரிஷப் பண்ட். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு ரிஷப் பண்ட் தான் முக்கிய காரணம். அந்தப் போட்டிகளிலும் கூட ரிஷப் பண்ட் இதே போன்று ஷாட் தான் அடித்து விளையாடினார்.

இது தான் அவரது இயல்பான ஆட்டம். இதை விமர்சிக்க எதுவும் கிடையாது. வெறும் ஓரிரு போட்டிகளில் short ballகளில் ரிஷப் பண்ட் விக்கெட்டை இழந்துவிட்டதால், அவரால் short ballகளை எதிர்கொள்ள முடியாது என்று கிடையாது. ரிஷப் பண்ட் மிக சிறந்த பேட்ஸ்மேன்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார். 

சும்மா அந்தப் பையனை திட்டாதீங்க… அப்படி தான் விளையாடுவான்.. - ரிஷப் பண்டிற்கு முன்னாள் வீரர் ஆதரவு | Sports Cricket