ஷாட்டா அது? - அவர் கிட்ட நிச்சயமா இது பற்றி பேசுறேன்... - ரிஷப் பண்ட் மீது கடுப்பில் இருக்கும் திராவிட்
ரிஷப் பண்ட் ஷாட் தேர்வு மற்றும் அவுட்டாகும் விதம் குறித்து அவரிடம் நிச்சயம் அணி நிர்வாகம் பேசி முடிவெடுக்கும் என்று இந்திய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்திருக்கிறார்.
இத்தொடரில் இருமுறை ரிஷப் பண்ட், தென்னாப்பிரிக்கா வேகப்புயல் ரபாடாவை இறங்கி வந்து ஆடி அசிங்கமாக அவுட்டானார். சின்னப்பையன் விவரம் பத்தாது என்று தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது மோசமான ஷாட் தேர்வினால் இந்திய அணி கூடுதலாக ரன் சேர்த்து லீடை 280-300க்குக் கொண்டு செல்ல முடியவே இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவரை தட்டிப் போட்டு எடுக்கின்றனர்.
இந்நிலையில், இது குறித்து ராகுல் திராவிட் பேசியதாவது -
ரிஷப் பண்ட் பாசிட்டிவ் ஆக ஆடக்கூடியவர். அப்படி ஆடுவது அவருக்கு ஓரளவுக்கு வெற்றியை கொடுக்கிறது என்பது தெரியும். ஆனால் அவரிடம் இது பற்றி பேச வேண்டிய நேரம் வந்து விட்டது. அவருடன் என்றாவது இதைப்பற்றி பேசித்தான் ஆகவேண்டும்.
வேறு ஒன்றும் பெரிதாக கிடையாது. எந்த சமயத்தில் அது போன்ற ஷாட்களை ஆட வேண்டும் என்பதை அவருக்குப் புரிய வைத்து விட்டாலே போதும். அவரிடம் யாரும் ஒரு போதும் ஆக்ரோஷமாக ஆட வேண்டாம் என்று கூறப்போவது இல்லை.
ஆனால், சில வேளைகளில் எந்த சமயத்தில் அந்த ஷாட்டை ஆட வேண்டும் என்பதை அவர் தேர்ந்தெடுத்துக் கொள்வது சிறந்தது. வந்தவுடனேயே அப்படி ஆட வேண்டாம் என்பது தான் கொஞ்சம் டைம் எடுத்துக் கொண்டு ஆடலாம்.
கடைசியில் ரிஷப் பண்ட் பாசிட்டிவ் பிளேயர் என்பதை மாற்றப்போவதில்லை. அவர் போன்றவர்கள் ஆட்டத்தின் போக்கை விரைவில் மாற்றக்கூடியவர்கள். எனவே அவரிடமிருந்து அந்தத் தன்மையை பறிக்க விரும்பம் இல்லை.
அவரிடம் வித்தியாசமாக ஆடச் சொல்லப் போவதும் இல்லை. சில சயமங்களில் அந்த மாதிரி ஆக்ரோஷ ஷாட்டை ஆடும் நேரம், சமயம் பற்றி அவரிடம் பேசுவோம்.
டெஸ்ட் போட்டியின் கடினமான காலக்கட்டத்தை கொஞ்சம் சமாளித்து கடந்து செட்டில் ஆகிவிட்டு அடிக்கலாம். அவர் கற்றுக் கொண்டுதான் உள்ளார். தொடர்ந்து கற்றுக் கொள்வார்.
இவ்வாறு திராவிட் பேசினார்.