கொஞ்சமாச்சும் பொறுப்பா விளையாடுங்க... - இந்திய அணியின் இளம் வீரர் மீது எரிந்து விழுந்த கம்பீர்
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் டக் அவுட்டாகிய ரிஷப் பண்டை முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
தென்னாப்பிரிக்கா சென்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்கா அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இதில் முதலில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி தென்னாப்பிரிக்காவின் செஞ்சூரியன் மைதானத்தில் நடந்து வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் தற்காலிக கேப்டனான கே.எல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ரஹானே மற்றும் புஜாரா விக்கெட்டை இழந்தபிறகு களமிறங்கிய வீரர்களில் ஹனுமா விஹாரி (40) மற்றும் ஷர்துல் தாகூர் (28) ஆகியோரை தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 266 ரன்கள் மட்டுமே எடுத்த போது, இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 240 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கியுள்ள தென்னாப்பிரிக்கா அணி, போட்டியின் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில், இப்போட்டியில் டக் அவுட்டான ரிஷப் பண்ட்டை, முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார்.
இது குறித்து கவுதம் கம்பீர் பேசியதாவது -
யாராவது ஒருவரை ஸ்லெட்ஜிங் செய்வது மிகவும் எளிதான விஷயம். அதேபோல், உங்களுடைய கையில் பேட் கொடுக்கப்பட்டு, எதிரணி பந்து வீச்சை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்போது அது மிகவும் கடுமையான விசயமாக இருக்கும். இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்த நிலையில், ரிஷாப் பண்ட் சண்டை போடுவதை விட்டுவிட்டு, மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாடுவதைத்தான் நான் விரும்பியிருப்பேன். இந்தியாவில் இளம் வீரர்கள் டீன் எல்கரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால், தலைசிறந்த அணிக்கெதிராக விளையாடும்போது எளிதான ரன்கள் சேர்த்து விட முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.