சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - உஸ்மான் கவாஜா சதமடித்து அசத்தல்

sports-cricket
By Nandhini Jan 06, 2022 07:15 AM GMT
Report

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது.

இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் கொரோனா பாதிப்பு காரணமாக விலகிய டிராவிஸ் ஹெட்டுக்கு மாற்றாக உஸ்மான் கவாஜா களமிறக்கப்பட்டிருந்தார்.

இவர் தனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இன்றைய ஆட்டத்தில் சதம் அடித்து விளாசி அசத்தியுள்ளார் கவாஜா. அவர் 206 பந்துகளில் 11 பவுண்டரியுடன் 103 ரன்களை திரட்டி தொடர்ந்து அவர் ஆடி வருகிறார்.