இங்க என்னயா நடக்குது... இந்திய அணியில் நடப்பதை பார்த்து கடுப்பான பேட்டிங் கோச்

sports-cricket
By Nandhini Jan 05, 2022 10:23 AM GMT
Report

முதல் டெஸ்ட் போட்டியில் நடந்த இப்படி ஒரு விஷயம் மிகவும் அதிர்ச்சி அளித்துள்ளது என்று பேட்டி அளித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் கோச் சஞ்சய் பாங்கர்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வரும் முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி காயம் காரணமாக வெளியேறினார்.

இதனால் துணைக் கேப்டனாக இருந்த கே.எல் ராகுல், தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்று விளையாடிக் கொண்டு வருகிறார்.

இந்திய அணிக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படும் ஜோகென்னஸ்பர்க் மைதானத்தில் தடுமாற்றத்துடன் விளையாடிக் கொண்டு வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதல் இன்னிங்சை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 229 ரன்கள் எடுத்து, 27 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனையடுத்து, 2வது இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்திய அணிக்கு துவக்கத்திலேயே 2 விக்கெட்டுகள் பறிப்போனது.

இதனையடுத்து, தடுமாற்றத்துடன் காணப்பட்டது. சற்று மோசமான பார்மில் இருக்கும் அனுபவ வீரர்களான புஜாரா மற்றும் ரகானே இருவரும் களத்தில் நின்று இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டார்கள்.

2ம் நாள் முடிவில் இந்தியா 85 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் இடம்பெறவில்லை என்பது மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது என்று சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது -

“டாஸ் போடுவதற்கு கேஎல் ராகுல் வெளியே வந்தபோது, அதை பார்த்த எனக்கு மிகவும் அதிர்ச்சியானது. இப்போட்டிக்கு முன்னர் விராட் கோலி காயம் காரணமாக வெளியில் இருப்பார் என யார் நினைத்திருப்பார்?. ஏனெனில், இந்திய அணியில் மிகவும் பிட்டாக இருக்கக் கூடிய முதன்மை வீரர் விராட் கோலி.

விராட் கோலி பேட்டிங்கில் சரிவர விளையாடவில்லை என்றாலும் அவர் அணியில் இல்லை என்றால் பெருத்த பின்னடைவாக இருக்கும். இதை பார்க்கும் பொழுது எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்திய அணி இத்தொடரில் நல்ல நிலையில் இருக்கும்போது, விராட் கோலி போன்ற வீரர் இடம் பெறவில்லை என்றால், எதிரணிக்கு கூடுதல் பலமாக அமைந்து விடும்.

இருந்தாலும், கே.எல் ராகுல் இந்திய அணியை பேட்டிங்கில் வழிநடத்தி வரும் விதம் மிகவும் அருமை. கடந்த வருடத் துவக்கத்தில் இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவம், இங்கு அவருக்கு நன்றாக இருக்கும்.

அந்த பார்மை அப்படியே தென்னாப்பிரிக்க தொடரிலும் எடுத்துச்சென்று நன்றாக ஆடி வருகிறார். இத்தொடரை இந்திய அணி நிச்சயம் வெல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.

இவ்வாறு அவர் பேசினார்.