ரெக்கார்ட் படைத்த ‘லார்டு’ ஷர்துல் - வாழ்த்து கூறி மீம்ஸ் போட்டு தெறிக்க விடும் நெட்டிசன்ஸ்
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷர்துல் தாகூரின் அசாத்திய பந்து வீச்சால், 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 250 ரன்களை எட்டவே தென்னாப்ரிக்க அணி திணறி வருகின்றது.
ஹோஹனஸ்பெர்க்கில் நடைபெற்று வரும் இந்தியா - தென்னாப்ரிக்காவுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட் கரியரில் முதல் முறையாக ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தென்னாப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்தது.
அதனை அடுத்து தொடங்கிய 2வது நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில், தென்னாப்ரிக்க அணி வீரர்கள் டீன் எல்கரும், கீகன் பெட்டர்சனும் களத்தின் நின்று நிதானமாக ரன் குவித்தார்கள். விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய அணி வீரர்கள் திணறி கொண்டிருக்கையில்தான் ஷர்துல் தாகூர் களத்தில் இறங்கினார்.
இன்னும் 2ம் நாள் ஆட்டம் முடியாத நிலையில், தேநீர் இடைவெளியின்போது 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஷர்துல் தாகூர். உடனே, ‘லார்ட் ஷர்துலுக்கு’ மீம்ஸ்களாக வாழ்த்துகள் குவிந்து வருகின்றது.
Who knew that 'Lord Shardul' which people used to use for meme would turn out to be real and such amazing performance would be given by Lord Shardul in many crucial situations ?? pic.twitter.com/SSOSsUf5il
— Aadi (@Aditya_goat_A3) January 4, 2022
Every time India needs a wicket desperately, Shardul Thakur comes & bless us all!
— Vishal Verma (@VishalVerma_9) January 4, 2022
All bow down to the Lord Shardul Thakur Supremacy!#SAvIND pic.twitter.com/iBZkiLZAXZ
On today's episode of decoding Lord Shardul Thakur. pic.twitter.com/ctv1LKzd1y
— Heisenberg ☢ (@internetumpire) January 4, 2022
If you want to break good partnership of opponent team, then call Lord shardul thakur?❤#INDvsSA pic.twitter.com/exDiDY2mA6
— M͎O͎H͎I͎T͎ Sнᴜᴋʟᴀ (@MohitShukla1030) January 4, 2022