ரகானே, புஜாராவை நீக்கினால் கோலியையும் நீக்கிவிடுங்கள்... - ஆஷிஷ் நெஹ்ரா விளாசல்

sports-cricket
By Nandhini Jan 04, 2022 09:02 AM GMT
Report

ரகானே, புஜாரா நீண்ட காலமாக பார்முக்குப் போராடி வருகிறார்கள். அவர்கள் இருவருக்குமே கால்கள் நகர்வது கிடையாது. டெக்னிக்கில்லும் மிகவும் வீக். இந்நிலையில், இவர்கள் இருவரையும் நீக்கினால், இதே போன்று சொதப்பும் கோலியையும் தூக்க வேண்டும் என்று முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்கா தொடரில் முதல் டெஸ்ட்டில் ரகானே கொஞ்சம் பரவாயில்லை. புஜாரா நிச்சயமாக அணிக்கு ஒரு எக்ஸ்ட்ரா லக்கேஜ்தான். 2-வது டெஸ்ட்டில் நேற்று புஜாரா 3 ரன்களிலும் அடுத்த பந்தே ஆலிவரிடம் ரகானே டக் அவுட்டானார். 2019ம் ஆண்டுக்குப் பிறகு, இருவரும் சராசரி 30 என்ற அளவில்தான் ரன் எடுத்து வருகிறார்கள்.

அஸ்வின் டக்கென பிட்சைப் புரிந்து கொண்டு ஆக்ரோஷமாக ஆடி 46 ரன்களை எடுத்துவிட்டார். அதனால், 202 ரன்கள் வந்தது இல்லையெனில் 150 தான் இருந்திருக்கும். அஸ்வின் ஆடுகிறார் புஜாரா ஆடுவதில்லை என்றால் அஸ்வினை 3-ம் நிலையில் இறக்கி புஜாராவை தூக்க வேண்டியதுதான். ரகானேவை தூக்கி விட்டு ஷ்ரேயஸ் அய்யரைக் கொண்டு வர வேண்டியதுதான்.

இது குறித்து ஆஷிஷ் நெஹ்ரா கூறியதாவது-

ரகானே, புஜாராவின் இடத்தை கேள்வி கேட்பவர்கள் அதே எண்ணிக்கையைத்தான் கொண்டிருக்கும் கோலியின் இடத்தை கேள்வி கேட்பதில்லை, இது ஏன்? ஏனெனில் கோலி ஒரு கேப்டன், இந்த இருவருக்கும் மேலாகவும் அவர் சில விஷயங்களைச் செய்துள்ளார். கம்பேர் செய்யக் கூடாது, ஆனால் ரகானேவும் புஜாராவும் நிறைய அணிக்காக பங்களித் துள்ளனர். 

மேலும் தொடரின் நடுவே இரண்டு அனுபவ வீரர்களை தூக்குவது நிச்சயம் இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தும். புஜாராவும் ரகானேவும் பெரிய பிரச்சனையாக இருக்கிறார்கள் என்று ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தொடரின் பாதியில் மாற்றுவது பின்னடைவை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் பேசினார்.