2022ம் ஆண்டு இந்திய அணி எங்கெல்லாம் போட்டியில் ஆடப் போகிறதுன்னு தெரியுமா? இதோ முழு பட்டியல் விபரம்

sports-cricket
By Nandhini Jan 02, 2022 08:04 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்த ஆண்டு டி-20 உலகக் கோப்பை, டெஸ்ட், ஒருநாள் என பல்வேறு தொடா்கள் இருக்கின்றன. 2022ம் ஆண்டுக்கான இந்திய அணியின் முழு அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது.

இந்திய அணி தற்போது டெஸ்ட், ஒருநாள் தொடா்களில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் விளையாடி வருகிறது. இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி-20 உலகக் கோப்பை இந்தியாவுக்கு பெரிய போட்டியாக இருக்கும். தற்போது, இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் ஜனவரி 3 முதல் 7 வரை வாண்டரெர்ஸில் டெஸ்ட் விளையாட இருக்கிறது.

பிறகு, 11 முதல் 15 வரை கேப் டவுனில் டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெற இருக்கிறது. இதன் பின் 19, 21, 23 தேதிகளில் 3 ஒருநாள் ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்காவுடன் விளையாட இருக்கிறது.

மேற்கு இந்திய தீவுகளுடன், பிப்ரவரி 6ம் தேதி அன்று அகமதாபாத்தில் முதல் ஒருநாள், 9ல் ஜெய்ப்பூரில் 2வது ஒருநாள், 12ல் கொல்கத்தாவில் 3வது ஒருநாள் ஆட்டமும், 15ல் கட்டாக்கில் முதல் டி-20 ஆட்டமும், 18ல் விசாகப்பட்டினத்தில் இரண்டாவது டி-20, 20ம் தேதி திருவனந்தபுரத்தில் 3வது டி-20யும் விளையாட இருக்கிறது.

அதனையடுத்து, இலங்கையுடன் பிப்ரவரி 25ம் தேதி முதல் மாா்ச் 1ம் தேதி வரை பெங்களுருவில் முதல் டெஸ்ட்டிலும், மாா்ச் 5 முதல் 9 வரை மொஹாலியில் 2வது டெஸ்டிலும், 13ம் தேதி மொஹாலியில் முதல் டி20, 15ல் தா்மசாலாவில் 2வது டி20, 18 இல் லக்னோவில் 3வது டி20யும் விளையாட இருக்கிறது. ஏப்ரல் - மே மாதங்களில் ஐ.பி எல் தொடா் நடைபெறும் நிலையில் இரண்டு மாதங்கள் சா்வதேச போட்டிகள் நடைபெற உள்ளன.

தென்னாப்பிரிக்காவுடன் இந்தியாவில் போட்டி: ஜூன் மாதம் 9ம் தேதி சென்னையில் முதல் ஒரு நாள், 12ல் பெங்களூருவில் இரண்டாவது ஒருநாள், 14ல் நாக்பபூரில் மூன்றாவது ஒருநாள், 17 இல் ராஜ்கோட்டில் நான்காவது ஒருநாள், 19 இல் டெல்லியில் 5 ஆவது ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

இங்கிலாந்துக்கு சுற்று பயணம்:

ஜூலை 1 முதல் 5ம் தேதி வரை மான்செஸ்டரில் கடந்த ஆண்டு விடுபட்ட டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் விளையாட இருக்கிறது. 7ல் சௌதாம்ப்டனில் முதல் டி-20, 9ல் பா்மிங்ஹாமில் இரண்டாவது டி-20, 10 இல் நாட்டிங்கமில் 3-வது டி20, 12 இல் லண்டனில் முதல் ஒருநாள், 14 இல் 2-வது ஒருநாள், 17 இல் மான்செஸ்டரில் மூன்றாவது ஒருநாள் ஆட்டங்களிலும் இங்கிலாந்துடன் மோத இருக்கிறது இந்தியா.

அக்டோபா் 16 முதல் நவம்பா் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி-20 உலகக் கோப்பையில் விளையாட இருக்கிறது இந்திய அணி. மேற்கு இந்தியாவுடன் சுற்றுப பயணமும் ஆசியக் கோப்பை போட்டிக்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதன் பின் வங்கதேச சுற்றுப் பயண தேதிகளும் முடிவாகவில்லை.

Tour of South Africa:

2nd Test - January 3-7, Johannesburg

3rd Test - January 11-15, Cape Town

1st ODI - January 19, Paarl

2nd ODI - January 21, Paarl

3rd ODI - January 23, Cape Town

Home series vs West Indies:

1st ODI - February 6, Ahmedabad

2nd ODI - February 9, Jaipur

3rd ODI - February 12, Kolkata

1st T20I - February 15, Cuttack

2nd T20I - February 18, Vizag

3rd T20I: February 20, Trivandrum

Home series vs Sri Lanka:

1st Test - February 25-March 1, Bengaluru

2nd Test - March 5-9, Mohali

1st T20I: March 13, Mohali

2nd T20I: March 15, Dharamshala

3rd T20I: March 18, Lucknow

International break in April-May (tentatively) due to Indian Premier League 2022 season. Home series vs South Africa:

1st T20I - June 9, Chennai

2nd T20I - June 12, Bengaluru

3rd T20I: June 14, Nagpur

4th T20I: June 17, Rajkot

5th T20I: June 19, Delhi

Tour of England:

1st T20I - July 7, Southampton

2nd T20I - July 9, Birmingham

3rd T20I - July 10, Nottingham

1st ODI - July 12, London

2nd ODI - July 14, London

3rd ODI - July 17, Manchester

Tour of West Indies:

Dates yet to be announced.

Asia Cup:

Dates yet to be announced.

T20 World Cup:

October 16 to November 13.