29 வயதிலேயே ஓய்வை அறிவித்த குயிண்டன் டிகாக் - ரசிர்கள் கடும் அதிர்ச்சி

sports-cricket
By Nandhini Dec 31, 2021 04:55 AM GMT
Report

இந்திய அணியுடனான தோல்வியை அடுத்து, தென் ஆப்ரிக்க அணியின் விக்கெட் கீப்பர் குயிண்டன் டிகாக் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வை பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயின்டன் டி காக் திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். அவரின் இந்த முடிவால் அவரது அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இந்தியாவுக்கு எதிரான செஞ்சூரியன் டெஸ்டில் தென்னாப்பிரிக்கா அணியில் டி-காக் இடம்பெற்றிருந்தார்.

இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் 34 ரன்களும், 2வது இன்னிங்சில் 21 ரன்களும் எடுத்திருந்தார். தென்னாப்பிரிக்காவுக்காக டி-காக் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட்டில் விளையாடுவார். கடந்த 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் குயின்டன் டி-காக் அறிமுகமானார்.

டெஸ்ட் போட்டியில் குயின்டன் டி-காக் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டனாக இருந்திருந்தார். இருந்தாலும், அணியின் மோசமான ஆட்டத்தை அடுத்து அவர் கேப்டன் பதவியிலிருந்து விலகினார்.

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் தனது டுவிட்டரில், ‘விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயின்டன் டி-காக் தனது வளர்ந்து வரும் தனது குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடுவதைக் காரணம் காட்டி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் என்று பதிவிட்டுள்ளது. டி-காக் தென்னாப்பிரிக்காவுக்காக மொத்தம் 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இதில், 3300 ரன்கள் எடுத்திருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 6 சதங்களும், 22 அரைசதங்களும் அடித்திருக்கிறார். அதே நேரத்தில் டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 141 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டி ஜனவரி முதல் 2 வாரங்களில் நடைபெற இருக்கிறது.

அத்தகைய சூழ்நிலையில், டி-காக் விலகல் தென்னாப்பிரிக்க அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்த டெஸ்டில் டிகாக்கிற்கு பதிலாக யார் களமிறங்குவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.