சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் இலங்கை நட்சத்திர வீரர்

sports-cricket
By Nandhini Dec 28, 2021 09:20 AM GMT
Report

இலங்கை வீரர் ஜீவன் மெண்டிஸ், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஜீவன் தனது ட்விட்டரில் பக்கத்தில் ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இலங்கை கிரிக்கெட் உடனான பயணம் மிகவும் அற்புதமாக இருந்தது,

2010 ஆம் ஆண்டிலிருந்து நான் அணியில் ஒருவராக இருந்ததில் பெருமை அடைகிறேன். இந்த அற்புதமான பயணம் முழுவதும் அழகான நினைவுகள் மற்றும் பல மதிப்புமிக்க பாடங்களை கற்றுக்கொண்டேன்.

எனது பயிற்சியாளர்கள் மற்றும் சக தோழர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என ஜீவன் மெண்டிஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

38 வயதான ஜீவன் மெண்டிஸ், இலங்கை அணிக்க 58 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 1 அரைசதத்துடன் மொத்தம் 636 ரன்கள் எடுத்துள்ளார் மற்றும் பந்து வீச்சில் 38 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

22 டி20 போட்டிகளில் மொத்தம் 207 ரன்கள் எடுத்துள்ளார் மற்றும் 12 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

கடைசியாக 2019ல் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஜீவன் இலங்கை அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.