இங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஸ் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

sports-cricket
By Nandhini Dec 28, 2021 03:40 AM GMT
Report

5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயண மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் மெல்போர்னில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச, இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 185 ரன்னுக்கு சுருண்டு வீழ்ந்தது.

இதனையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 267 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன் பின்பு, 82 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 31 ரன் எடுத்தது. 3-வது நாள் ஆட்டம் இன்று நடந்தது. இன்றும் இங்கிலாந்தின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது.

இறுதியில், இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 68 ரன்னுக்கு சுருண்டு வீழ்ந்தது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றிருக்கிறது ஆஸ்திரேலியா. அந்த அணியின் ஸ்காட் போலண்ட் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தியதுடன் ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார்.